செயலை விட அதன் பயனை நேசித்தால்!
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் அடிக்கிறது.
தமிழகத்தில் மே 3-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் துவங்கியது. அன்று முதல் மாநிலம் முழுவதிலும் நல்ல வெயில் அடிக்கிறது. சென்னையில் முதல்வாரத்தில் வெயில் குறைவாக இருந்தது. ஆனால் அதன் பிறகு வெயில் அதிகரிக்கத் துவங்கியது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வெயில் அதிகமாக இருந்தது. பல்வேறு பணிகளுக்காக வெளியில் வந்தோர் மிகவும் அவதிப்பட்டனர். பஸ்களிலும்மின்சார ரயில்களிலும் செல்வோர் வெப்பம் தாங்காமல் சிரமப்பட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இப்போதுதான் அதிக வெயில் அடிக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் சனிக்கிழமை 105.3 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 108.3டிகிரியும் பதிவாகியிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை இந்த அளவு உச்சத்தை அடைந்தது. நுங்கம்பாக்கத்தில் 108 டிகிரியும் மீனம்பாக்கத்தில் 108.3 டிகிரியும் பதிவாகி உள்ளன.
கடந்த 1991-ம் ஆண்டு முதல் அக்னி நட்சத்திரம் நிலவிய நேரத்தில், நுங்கம் பாக்கத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டுவரை பதிவானஅதிக பட்ச வெப்ப நிலை விவரம்:
1991- 106.3
1992- 105.4
1993- 102.9
1994- 107,8
1995- 102.4
1996- 107.8
1997- 107,9
1998- 111.6
1999- 103.6
1998-ம் ஆண்டு சென்னிைல் அதிகபட்சமாக 111.6 டிகிரி இருந்தது. இந்த ஆண்டு அதையும் தாண்டும் என்று தெரிகிறது.
ஞாயிற்றுக் கிழமைமாலை 6 மணிக்கு மேல் வீசத் துவங்கிய கடல் காற்றால், சென்னை மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மாலையில் சென்னைமெரீனா கடற்கரை, எல்லியட்ஸ், திருவான்மியூர் கடற்கரை ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
கடும் வெயில் குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் எஸ்.கே. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில்ஞாயிற்றுக்கிழமை அதிக பட்சம் 108.7 டிகிரி வெப்பம் பதிவானது என்றார்.
தமிழ் நாட்டில் பிற மாவடங்களில் ஞாயிற்றுக்கிழமை பதிவான வெப்பநிலை விவரம் வருமாறு:
நெல்லை 106 டிகிரி.
தூத்துக்குடி 99.
மதுரை 102.4
சேலம் 104.
கடலூர் 107.
புதுச்சேரி 103.
தஞ்சை 104.
வேலூர் 107.2.
ஈரோடு 106.
திருச்சி 101.
புதுக்கோட்டை 101.
பெரம்பலூர் 103.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications