மகேஷ் பூபதியுடன் இணைந்து விளையாட வெய்ன் பெரைரா, போர்க்மேன் விருப்பம்
புது தில்லி:
இந்தியாவின் முதல் நிலை ஆட்டக்காரர் லியாண்டர் பயஸிடமிருந்து பிரிந்துவிட்டதால் தங்களுடன் இணைந்துவிளையாட வரும்படி மகேஷ் பூபதிக்கு வெய்ன் பெரைரா, போர்க்மேன் ஆகியோரிடமிருந்து அழைப்புவந்துள்ளது.
தொடர்ந்து 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் விளையாடி அதில் இரு போட்டிகளில்கோப்பையை வென்று உலகின் முதல் டென்னிஸ் இரட்டையர் ஜோடி என்ற பெருமையைப் பெற்ற இந்திய வீரர்கள்லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி இருவரும் தங்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
மகேஷ் பூபதியை விட்டுப் பிரிந்ததற்கு அவரது பயிற்சியாளர் என்ரிகோ பிபர்னோதான் காரணம் என்றுதெரிவித்துள்ள லியாண்டர் பயஸ், இனி வரும் இரட்டையர் ஆட்டங்களில் ஜான் சிமெரின்க் என்பவருடன்இணைந்து விளையாட உள்ளார். மகேஷின் பயிற்சியாளர் பிபர்னோ நீடிக்கும் வரை மகேஷுடன் தான் இணைந்துவிளையாடுவது சாத்தியமில்லை என்றும் பயஸ் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், தங்களுடன் இரட்டையர் போட்டிகளில் இணைந்து விளையாட வரும்படி தென் ஆப்பிரிக்காவின்வெய்ன் பெரைரா மற்றும் ஸ்வீடனின் போர்க்மேன் ஆகியோரிடமிருந்து அழைப்பு வந்துள்ளதாக மகேஷ் பூபதிதெரிவித்துள்ளார். தற்போது ஜெர்மனியின் மைக் நவ்லெஸ்ஸுடன் மகேஷ் பூபதி இணைந்து விளையாடிவருகிறார்.
இதற்கிடையே தன் மீது லியாண்டர் பயஸ் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிபர்னோ வருத்தம் தெரிவித்துள்ளார்.மகேஷும், லியாண்டரும் மீண்டும் இணைய வாய்ப்பு ஏற்பட்டால், மகேஷின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்துவிலகத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications