தமிழகத்தில் இன்று
டெல்லி:
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்ப மசோதா(இன்பர்மேசன் டெக்னாலஜி பில்) திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் மசோதாவைத் தாக்கல் செய்தார். மின்னணுமுறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் (எலெக்ட்ரானிக் டாகுமென்ட்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் சிக்னேச்சர்)மற்றும் பிற மின்னணு பரிமாற்ற்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கச் செய்ய இந்த மசோதா உதவும்.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் தேதி இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.அப்போது மசோதாவில் பல திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரியதால், அறிவியல்தொழில்நுட்ப நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது 35 மாற்றங்கள் செய்யுமாறு குழு,அரசுக்குப் பரிந்துரை செய்தது.
சைபர் கஃபேக்களில் இன்டர்நெட் பிரெளசிங் செய்ய வருவோர் தங்களது முகவரியைத் தர வேண்டும் என்பதுஉள்ளிட்ட 2 பரிந்துரைகளை அரசு நிராகரித்து விட்டது. பிற திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மசோதாவைத் தாக்கல் செய்து அமைச்சர் மகாஜன் பேசுகையில், மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும்ஒப்பந்தங்கள் மற்றும் அதுதொடர்பானவற்றிற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்படும்.
கம்ப்யூட்டர் ஆவணங்களில் மோசடி செய்பவர்களுக்குக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை முதல் ரூ. 2லட்சம் அபராதம் வரை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
அவசர கோலத்தில் இந்த மசோதாவை அரசு கொண்டு வரவில்லை. ராஜ்யசபாவில் தாக்கல் செய்யும் முன் 155முறை மசோதாவில் மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வந்தது. மசோதாவைத் தயார் செய்ய மத்திய அரசுக்கு ஒருவருடம் பிடித்தது.
மின்னணு முறையில் நடைபெறும் வர்த்தகம் மற்றும் பிற பரிமாற்றங்களை முறைப்படுத்துவதற்காகவே இந்த சட்டமசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த முறையில் நடைபெறும் தகவல் தொடர்பை, மின்னணுவர்த்தகம் என்று மத்திய அரசு வரையறை செய்துள்ளது என்றார் அவர்.
இரும்பு, உருக்கு ஆலை தனியார் மயம்:
இந்திய இரும்பு மற்றும் உருக்கு ஆலையை, மத்திய உருக்கு ஆணையத்திடமிருந்து பிரிப்பதற்கான சட்டத் திருத்தமசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மூலம் இந்த நிறுவனத்தை தனியாரிடம் விட வழி ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ரூ. 200 பில்லியன் அளவுக்கு சொத்து மதிப்புடைய இஸ்கோ நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கி வரும் நேரத்தில்அதை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பது தேவையில்லாதது என்று அவர்கள் கூறினர்.
மசோதா மழை:
இதற்கிடையே திங்கள்கிழமை துவங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி வாரக் கூட்டத்தில்பல்வேறு மசோதாக்கள் கொண்டு வரப்படவுள்ளன.
முதலாவதாக தகவல் தொழில்நுட்பச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இதுதவிர வேதியியல் ஆயுத சட்டமசோதா, பேடன்ட் தொடர்பான சட்ட மசோதா, குடியரசுத் தலைவரின் ஊதியத் திருத்த விகித மசோதா ஆகியவைதாக்கல் செய்யப்படவுள்ளன.
இதுதவிர, உத்தராஞ்சல், சட்டீஸ்கர், ஜார்கன்ட் ஆகிய புதிய மாநிலங்கள் அமைப்பதற்கான ஒப்புதல் மசோதாவும்தாக்கல் செய்யப்படவுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களே கூட்டம் முடிய உள்ள நிலையில், இந்த மசோதாக்களை விரைவில் முடிக்க வேண்டியநிலையில் மத்திய அரசு உள்ளது.
யு.என்.ஐ
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications