தமிழகத்தில் இன்று
புது தில்லி:
இந்தியாவில் செல்ஃபோன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்புப்படி சுமார் 18.8 லட்சம் பேர்செல்ஃபோன் பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் செல்ஃபோன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத் தகவலை மத்திய தகவல்தொடர்புத் துறை இணைஅமைச்சர் தபன் சிக்தர், மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதி வரை எடுக்கப்பட்ட கணக்குப்படி தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் மட்டும் 7 லட்சத்து 95பேர் செல்ஃபோன் வைத்துள்ளனர். நாட்டில் உள்ள மற்ற 18 தொலைத் தொடர்பு வட்டங்களில் சுமார் 10 லட்சம் பேர் செல்ஃபோன்உபயோகிக்கின்றனர்.
அதிகபட்சமாக தில்லியில் மட்டும் 3.32 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் செல்ஃபோன் வைத்துள்ளனர். தில்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 3.19லட்சம் பேரும், கல்கத்தாவில் 90 ஆயிரம் பேரும், சென்னையில் 54 ஆயிரம் பேரும் செல்ஃபோன் உபயோகிக்கின்றனர்.
இந்திய செல்ஃபோன் இயக்குநர்கள் சங்கக் கணக்குப்படி 1999-2000-ம் ஆண்டில் மட்டும் 6.84 லட்சம் புதிய செல்ஃபோன் இணைப்புகள்வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் செல்ஃபோன் தேவை அதிகமாக உள்ளது. உள்நாட்டில் செல்ஃபோன்கள் தயாரிக்கப்படாததால், சமீபத்தியஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கையின் கீழ் வெளிநாடுகளில் இருந்து செல்ஃபோன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தொலைத்தொடர்புத் துறையின் மூலம் நாட்டில் சில முக்கிய நகரங்களில் செல்ஃபோன் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயல்பாட்டைப் பொறுத்துநாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இச் சேவை விரிவுபடுத்தப்படும் என்றார் அமைச்சர் சிக்தர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications