ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி மே 22-ம் தேதி தேர்வு
மும்பை:
ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி மே 22-ம் தேதி அறிவிக்கப்படும்.
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இம் மாதம் 28-ம் தேதி ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர்துவங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.
இப் போட்டித் தொடருக்கான இந்திய அணி மே 22-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தற்போது, இந்தியஅணிக்கு25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் புனேயில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ராகுல் திராவிட்,கங்குலி, கும்ளே ஆகியோர் இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருவதால், பயிற்சியில் அவர்கள்கலந்து கொள்ளவில்லை.
பயிற்சியின் இடையே மே 22-ம் தேதி 14 பேர் இந்திய அணி அறிவிக்கப்படும். ஏற்கெனவே இவ்வாறுதான்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இங்கிலாந்தில் இருந்து கஙகுலி மே 22-ம் தேதிக்குள் இந்தியா திரும்ப முடியாதுஎன்பதால் அணித் தேர்வு மே 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்தது.
ஆனால், தற்போதைய நிலவரப்படி மே 21-ம் தேதியே கங்குலி மும்பை வந்துவிடுவார் என்பதால், ஏற்கெனவேஅறிவித்தபடி மே 22-ம் தேதியே இந்திய அணி அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது.
இந்திய வீரர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் பயிற்சி குறித்து அணியின் பயிற்சியாளர் கபில் தேவ்கூறியதாவது:
புனே கிளப்பில் இந்திய வீரர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நிலவும்தட்பவெப்பநிலை வீரர்கள் நல்ல பயிற்சி எடுக்க ஏதுவாக உள்ளது. வீரர்களின் உடலுக்கு நல்ல பயிற்சிஅளிக்கப்படும். காலையில் ஒரு மணி நேரம் உடல் பயிற்சியும், காலை உணவுக்குப் பிறகு நெட் மற்றும் பீல்டிங்பயிற்சியும் அளிக்கப்படும் என்றார் கபில் தேவ்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications