தமிழகத்தில் இன்று
சென்னை:
எம்.எல்.ஏவின் கனவு நனவாவது எப்போது என்பது பற்றி சுவாரஸ்யமான விவாதம் சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சட்டசபையில் செவ்வாய்க் கிழமை சட்டமன்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சிவ புண்ணியம் பேசினார்.
அவர் பேசும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதிக்கென அரசு ஆண்டுதோறும் 60 லட்ச ரூபாய் ஒதுக்கிறது. அந்த தொகையை ஒருகோடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை, நகைச்சுவையாக வலியுறுத்தினார்.
அமைச்சர் அன்பழகன் நேற்று இரவு ஒரு மணியளவில் என் கனவில் வந்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியை ஒரு கோடி ரூபாயாகஉயர்த்தி தருகிறேன் என்றார். பின்னர் மஞ்சள் துண்டு சகிதம் முதல்வரும் என் கனவில் தோன்றினார். அவரும் உறுதி சொன்னார் என்றார் சிவ புண்ணியம்.
உடனே அமைச்சர் அன்பழகன் எழுந்து அந்த கனவு கனவாகவே இருந்து விட்டுப் போகிறது என்று பதிலளித்தார். அதைக் கேட்டு உறுப்பினர்கள்சிரித்துக் கொண்டிருந்த வேளையில் முதல்வர் சபைக்குள் நுழைந்தார்.
முதல்வருடைய வருகையைப் பார்த்துக் கொண்டே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இன்னொரு உறுப்பினர் சுப்பராயன் எழுந்து , கனவை நிறைவேற்றமுதல்வர் வந்திருக்கிறார் என்றார். அதற்கு முதல்வர் குறுக்கிட்டு, நிச்சயமாக நிறைவேறும் - கனவில் என்று சொன்னதும் பேரவையில் பெரும்சிரிப்பலை எழுந்தது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications