தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
தேயிலை விலை பிரச்சனையில் வீண் அரசியல்: கருணாநிதி கோபம்

சென்னை:

நீலகிரியில் தேயிலை விலை வீழ்ச்சி பிரச்சனையை வேண்டுமென்றே அரசியலாக்கும் வீண்முயற்சி நடக்கிறுது. அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர்கருணாநிதி கடுமையாக எச்சரித்தார்.

நீலகரியில் தேயிலை விலை பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள்பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திங்கள் கிழமை தேயிலை விவசாயிகள் ஊட்டியில் அரை நிர்வாண ஊர்வலம் நடத்தினர்.இதில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து போலீசார் தடியடி பிரயோகம் செய்தனர்.

இச்சம்பவம் பற்றி சட்டசபையில் செவ்வாய் கிழமை எதிர்க் கட்சி உறுப்பினர்கள்பிரச்சனையை கிளப்பினர். ஞானசேகரன் (த.மா.கா), சுந்தரம் (அ.தி.மு.க.), சுப்பராயன்(இந்திய கம்யூ) உள்ளிட்ட உறுபிபனர்கள் இப் பிரச்சனை மீதான விவாதத்தில் பேசினர்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி, தேயிலை விலை வீழ்ச்சிக்கு அரசு காரணமல்லஎன்றும், தேவைையில்லாமல் அரசியலாக்கும் முயற்சியை அரசு அனுமதிக்காது என்றும்எச்சரித்தார்.

முதல்வரின் எச்சரிக்கை வருமாறு:

சில பிரமுகர்களின் சூழ்ச்சிகளின் காரணமாக விவசாயிகள் பகடைக் காய்களாகபயன்படுத்தப்பட்டு, தூண்டி விடப்பட்டுள்ளனர். தேயிலை விலை வீழ்ச்சியை சமாளிக்கதமிழக அரசு அதன் மீதான விற்பனை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாககுறைத்தது.

இதனால் திருப்தி அடைந்த விவாசாயிகள் குழு அரசை பாராட்டி அறிக்கைவெளியிட்டனர்.

மத்திய அரசும் தம் பங்கிற்கு ஐந்து ரூபாய் மானியம் வழங்கியது. இற்குமதி மீதான சுங்கவரியை 15 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உ.யர்த்தியது.

குழுவில் சர்வ கட்சியினரும் உள்ளனனர். ஆனால், ஆளும் கட்சியை பழி தீர்க்க வேண்டும்என்கிற ரீதியில் அரை நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.

அதில் ஈடுபட்ட விவசாயிகள் பஸ் மீது கல் வீசியுள்ளனர். சாலை மறியல் செய்துள்ளனர்.அதனால் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியுள்ளளர்.

கல்வீச்சில் 11 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஊர்வலத்தில் வந்தவர்கள்மூவர் காயம் பட்டுள்ளனர்.

இப்படிப்பட்ட போராட்டத்தை உறுப்பினர்கள் நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதுதெரியவில்லை.தேயிலை விவசாயிகள் பிரச்சனையில் எல்லா கட்சிகளும் அக்கறைஎடுத்துக் கொண்டுள்ளன என்பதை உணர்வீர்கள்.

இச்சூழ்நிலிையில் இதை வேண்டுமென்றே அரசியலாக்கும் வீண் முயற்சி நடக்கிறது. அதைஅரசு அனுமதிக்காது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+