தமிழகத்தில் இன்று
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக ஐ.என்.டி.யூ.சி. வாழப்பாடி ராமமூர்த்தியின் கட்டுப்பாட்டிற்கு வரவுள்ளது.
தமிழக ஐ.என்.டி.யூ.சிக்கு நடந்த தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் ஆதரவாளர்கள் வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தொழிற்சங்கம் கை மாறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தொழிற்சங்க அமைப்பாக ஐ.என்.டி.யூ.சி செயல்பட்டு வருகிறது. இதன் தமிழக கிளையில் பல கோஷ்டிகள் இருந்து வருகின்றன.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மூன்றாக உடைந்து மூப்பனார் தலைமையில் தமாகா என்றும், வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் ராஜீவ் காங்கிரஸ்என்றும் தனிக்கட்சிகளாக விளங்குகின்றன.
இந்த இரு கட்சிகளின் தொழிற்சங்க ஆதரவாளர்கள் தொடர்ந்து ஐ.என்.டி.யூ.சியில் இயங்கினாலும், தமது கட்சிக்கென தனி ஆதரவாளர்கள் வட்டத்தைஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.
இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், தமாகாவைச் சேர்ந்தவர்கள், ராஜீவ் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்ற மூன்று பிரிவினர்இத்தொழிற்சங்கத்தில் இருக்கின்றனர். அரசியல்ரீதியாக அவர்கள் இந்த மூன்று கட்சிகள்ை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தொழிற்சங்க அமைப்பில்ஒரே குடையின் கீழ்தான் இருக்கின்றனர். ஆனாலும் இத்தொழிற்சங்கத்தை தங்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில்இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான இத்தொழிற்சங்கத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குறைவு என்று சொல்லலாம். மூப்பனாருக்கும்,வாழப்பாடி ராமமூர்த்திக்கும்தான் ஆதரவாளர்கள் அதிகம். மூப்பனாரின் சார்பில் பி.எல்.சுப்பையா என்பவர் தலைவராகவும், வாழப்பாடிராமமூர்த்தியின் சார்பில் எம்.எஸ்.ராமச்சந்திரன் என்பவர் தலைவராகவும் இருந்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக இருந்தனரேதவிர தலைமைப் பதவிக்கு அவர்களால் போட்டியிட முடியவில்லை.
இந்நிலையில் எம்.எஸ்.ஆர். மறைந்ததும் ஐ.என்.டி.யூ.சியை கைப்பற்றுவதில் மூப்பனார் ஆதரவாளரான பி.எல்.சுப்பையா கோஷ்டியினருக்கும் வாழப்பாடிராமமூர்த்தி ஆதரவாளரான காளன், கல்யாணசுந்தரம் போன்றவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் பி.எல்.சுப்பையாஆதரவாளர்கள் ஐ.என்.டி.யூ.சி. அலுவலகத்தை கைப்பற்றினர். இதற்கென சென்னை ராயப்பேட்டையில் சொந்தக் கட்டடம் உள்ளது.
தற்போதும் இந்த அலுவலகம் பி.எல்.சுப்பையா கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. இந்நிலையில் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தலை நடத்திதேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பில் அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி கடந்தவாரம் ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தமாகாவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.தலைவராக தமாகாவைச் சேர்ந்த பி.எல்.சுப்பையா போட்டியிட நிர்வாகிகளாக இரு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் போட்டியிட்டனர்.
இந்த அணியை எதிர்த்து ராஜீவ் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ காளன் தலைமையில் ஒரு அணி போட்டியில் இறங்கியது. இந்த அணியில் துணைத்தலைவர் பதவிக்கு வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிட்டார். அவர் போட்டியிடும் தகவலை கடைசி நேரத்தில்தான் இந்த அணியினர் வெளியிட்டனர்.
வாழப்பாடி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காளன், காங்கிரஸைச் சேர்ந்தவர். எனவே என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் திண்டிவனம்ராமமூர்த்தி திணறினார்.
இப்பின்னணியில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவாளர்களே வென்றுள்ளதாக தெரிய வருகிறது. ஓட்டுக்கள் எண்ணப்பட்டுவிட்டன. ஆனால் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில்அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் அதற்கு முன்பே நிலவரங்கள் தெரிய வந்துள்ளதால் வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போது ஜெனீவாநாட்டில் இருக்கும் வாழப்பாடி ராமமூர்த்தி ஜூன் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார். அவர் திரும்பியதும், அவரது தலைமையில் சென்னையில்ஐ.என்.டி.யூ.சி. பேரணி நடத்தி தலைமை அலுவலகத்தை மூப்பனார் ஆதரவாளர்களிடமிருந்து பெறுவது என்று ராஜீவ் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
-
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்?












Click it and Unblock the Notifications