தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்தியா-நேபாளம் இடையே வரும் ஜூன் 1ம் தேதி முதல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை துவங்குகிறதது.
கடந்த டிசம்பரில் நோளத்திலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் துணையுடன்ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தினர்.
இதையடுத்து நேபாளத்தில் விமான நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி விமான சேவையைஇந்தியன் ஏர்லைன்ஸ் நிறுத்தியது.
இப்போது போக்குவரத்து மீண்டும் ஜூன் 1-ம தேதியிலிருந்துமீண்டும் தொடங்கப்படும் என்று திங்களன்றுஅறிவிக்கப்பட்டது.
சுற்றுலாத்துறையினரிடமிருந்து வந்த அதிகபட்ச வற்புறுத்தல் காரணமாகவும், சுற்றுலா வரத்து குறைந்ததாலும்பாதிக்கப்பட்ட நேபாள அரசின் வெளியிறவுத் துறை அமைச்சர் அமைச்சர் சக்ர பிரசாத் பாஸ்டோலோ இந்தியாவந்தார்.
திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுநடவடிக்கைகள் குறித்து இந்திய அரசிடம் விளக்கினார்.
இதனால் திருப்தி அடைந்த இந்திய அரசு மீண்டும் விமான நிலைய போக்குவர்த்தை துவக்க முடிவெடுத்தது.இந்திய விமானத் துறை குழு ஒன்று காத்மாண்டு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டுவந்தது.
அதன் பிறகு இந்தியாவிலிருந்தும், காத்மாண்டுவிருந்தும் விமானப் போக்குவரத்திற்கான புதிய அட்டவணைவெளியிடப்பட்டது.
இதன்படி, ஐசி- 813 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லியிலிருந்து இந்திய நேரப்படி காலை 11.15க்குபுறப்பட்டு 13.00 க்கு சென்றடையும். அங்கிருந்து 13.50க்குப் புறப்பட்டு 15.10க்கு டெல்லி வந்தடையும்.
திங்கள், புதன்கிழமைகளில் கல்கத்தாவிலிருந்து ஐசி 747 விமானம் இந்திய நேரப்படி 10.15க்கு புற்ப்பட்டுகாத்மாண்டுவை இந்திய நேரப்படி 11.45க்கு சென்றடையும்.
அங்கிருந்து திரும்பும் விமானம் ஐசி 748 இந்திய நேரப்படி 12.40க்கு புறப்பட்டு கல்கத்தாவை இந்திய நேரப்படி13.45 க்கு வந்தடையும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கல்க்தாவிலிருந்து இந்திய நேரப்படி 09 50க்குபுறப்படும் விமானம் காத்மாண்டுவை இந்திய நேரப்படி 11.20க்கு சென்றடையும். காத்மாண்டுவிலிருந்து இந்தியநேரப்படி 12 15க்கு புறப்படும் விமானம் கல்கத்தாவை இந்திய நேரப்படி 11 20க்கு வந்தடையும்.
வாரணாசியிலிருந்து காத்மாண்டுக்கு விமானப்போக்குவரத்து தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஐசி 814 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதி கடத்தப்பட்டபோது நேபாள விமான நிலையத்தில் உள்ளபாதுகாப்பு குறைகள் வெளிச்சத்திற்கு வந்தது.
நேபாள அரசு சர்வதேச அளவிற்கு எல்லா முன்னேற்ற ஏற்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினாலும் இந்திய அரசைஅது திருப்தி படுத்தாத காரணத்தால் இந்திய அரசு நேபாளஅரசின் கோரிக்கையை நிராகரித்து வந்தது.
கடந்த வாரம் போஸ்டோலோ வந்து சென்ற பின்பு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷரத் யாதவ்இந்தியா நேபாளத்தில் செய்யப்பட்டுள் ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதால் இந்தியா மீண்டும் விமானப்போக்குவரத்தை துவங்குவதாக கூறினார்.
இந்திய காத்மாணடு விமானங்களில் எப்போதும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்ததால் , விமானப்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்ட போது இந்தியாவின் வருமானமும் குறைந்து காணப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications