தமிழகத்தில் இன்று
டெல்லி:
விரைவில் டி- 90 ரக டாங்கிகளையும், நவீன போர் பயிற்சி விமானங்களையும்இந்தியா வாங்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்பார்லிமென்டில் கூறினார்.
அவர் கூறுகையில், இந்த ஆயுதங்கள், விமானங்கள் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைநடத்த அமைக்கப்பட்ட குழு விரைவில் இது குறித்து முடிவெடுக்கும் என்றும், ஆயுதபரிசாதனைகள் உள்ளிட்ட மற்ற அனைத்து ஆரம்ப கட்ட சோதனைகளும்முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டி-72 ரக அர்ஜூன் டாங்கிகள் குறித்து எந்த விதமானசந்தேகமும் தேவையில்லை. அவை ராஜஸ்தான் மற்றும் ஒரிஸ்ஸாவில் வெற்றிகரமாகபரிசோத்க்கப்பட்டுள்ளன.
டி-72 ரகத்தைச் சேர்ந்த 124 டாங்கிகள் வாங்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திமையம் (டிஆர்டிஒ) வழியாக ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. இவை எப்போதுபாதுகாப்புத் துறையின் கைக்கு வரும் என்பதைக் கூறமுடியாது.
அதுவரை நம்மிடம் உள்ள டி-90 வகை டாங்கிகளே பாகிஸ்தானின் டி-85 ரகடாங்கிகளை சமாளிக்கப் போதுமானவை. மிக்-21 ரக ராணுவ விமானங்களின் தரம்குறித்து எழுப்பட்டு சந்தேகங்கள் தேவையில்லாதவை.
அவ்விமானங்கள் சற்று மேம்படுத்தப்பட்டவுடன் அவை இந்திய விமானப்படையில்இன்னும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்படக் கூடிய தரத்துடன் உள்ளன.அதில் ஏற்பட்ட விபத்துக்களுக்கு மனித தவறுகளே காரணம் என்றும், அதுவும்பயிற்சியின் போதுதான் விபத்துகள் நடந்துள்ளன.
இந்தியா விமானப்படை தலைவர் அதை சோதித்துப் பார்த்து அவை நல்ல தரத்துடன்இருப்பதாகக் கூறினார். பாகிஸ்தான் வாங்கியுள்ள ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும்ராடார்களை இந்தியாவும் வாங்க முடிவு செய்துள்ளது. இவற்றை உக்ரேனிடமிருந்துவாங்கத் திட்டமிட்டுள்ளோம்.
ஆனால் டிஆர்டிஓ இதை இந்தியாவிலேயே,தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளது.ஆனால், அவசரம காரணமாக இதை வெளிநாட்டிலிருந்து வாங்கத்திட்டமிட்டுள்ளோம். இது பாகிஸ்தானின் மிரட்டல்களை சந்திக்கமிகவும்அவசியமானதாகும்.
சமீபத்தில் பாரத்பூர் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின், ஆயுதங்களையும்,ஆயுதக்கிடங்கையும் பாதுகாக்க 4 பில்லியன் ரூபாய் செலவில் திட்டங்கள்தீட்டப்பட்டுள்ளன.
இந்தத் தீ விபத்தத்ல ரூ 4 பில்லியன் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கிடங்கைசீரமைக்கும் பணி நடைபெறத் துவங்கிவிட்டன. அயல் நாட்டு உதவியில்லாமல் நாமேஇந்த சீரமைப்பை செய்துவிட முடியும்.
இவ்வாறு ஜார்ஜ் பெர்ணான்டஸ் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications