தமிழகத்தில் இன்று
சென்னை:
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்தால் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.மூப்பனார் கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
நீலகிரியில் தேயிலை விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியுள்ளனர்.குளிர் பிரதேசத்தில் அவர்கள் தங்களை இப்படி வறுத்தியுள்ளனர். அவர்கள்பிரச்சினையில் மத்திய அமைச்சர் மாறன், முதல்வர் கருணாநிதி ஆகியோர்தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்.
புலிகள் விஷயத்தில் பகிரங்கமாக வைகோவும், டாக்டர் ராமதாஸும் பேசிவருகின்றனர். முதல்வர் கருணாநிதி அதை கண்டு கொள்வதாக தெரியவில்லை.நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அவர்கள் கூறியபோதேகண்டு கொள்ளாமல் இருந்தவர்தான் கருணாநிதி.
விடுதலைப் புலிகள் பற்றி முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்கள்,ஏற்கனவே நான் கூறியவைதான். அதைத்தான் இப்போது கருணாநிதி ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்தால் அதைக் கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி எனது நெருங்கிய நண்பர். 2001-ல்காமராஜர் ஆட்சியை எனது தலைமையில் ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தைஅவர் தெரிவித்துள்ளார். அதுபற்றி மேலும் எதுவும் நான் சொல்வதற்கில்லை.
2001 தேர்தலில் திராவிடக் கட்சிகளுடன் சேராமல் தனித்துப் போட்டியிடுவீர்களாஎன்ற கேள்வி தேவையற்றது. ஏனெனில் நாங்களும் திராவிடக் கட்சிதான்.
அதிமுக, தமாகா கூட்டணிக்கு ராமதாஸ் இன்னமும் வரவில்லை. அவர் திமுகஅணியில்தான் இருக்கிறார். அதனால் அவர் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன்.
தேர்தல் வருவதற்கு இன்னும் நிறைய மாதங்கள் உள்ளன. எனவே கூட்டணி பற்றிஅப்போதுதான் முடிவெடுக்கப்படும் என்றார்.
பேட்டியின்போது முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்உடனிருந்தார். அவர் போலீஸாரிடம் கூறுகையில், ஊட்டியில் தேயிலை விவசாயிகள்அமைதிப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது சிலர் கல்வீசினர். கலவரம் தூண்டிவிடப்பட்டது. அமைதியாக போராடியவர்களை போலீஸார் வீடு புகுந்து கைதுசெய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications