தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
போலி ஆவணங்கள் தயாரித்து இலங்கையிலிருந்து ஆள் கடத்தல்

கொழும்பு:

போலி பாஸ்போர்ட், விசா மற்றும் இதர தஸ்தாவேஜூகள் தயாரித்து விடுதலைப் புலிகள் பொதுமக்களை இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கு அனுப்பிவருவதாக இலங்கை போலீசார் கூறியுள்ளனர்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 17 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. லட்சணக்கணக்கான தமிழர்கள்இலங்கையிலிருந்து அகதிகளாக இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசுப் பத்திரிக்கையான த டெய்லி நியூஸ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளாக இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் பலர்ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும், அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும் போலீசார்தெரிவித்துள்ளனர்.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் இது குறித்து அரசிடம் தகவல் தெரிவித்துள்ளன. பல தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் நுழைய முயலும்போதுபிடிபடுவதாகவும் அந்தத் தூதர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சிஐடி விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அப்பத்திரிக்கைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+