தமிழகத்தில் இன்று
டெல்லி:
தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் 70,000 இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ்லோக்சபாவில் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை லோக் சபாவில் எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியதாவது:
மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 70,000 இலங்கை அகதிகள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் உள்ள 129முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரிசாவிலுள்ள ஒரு முகாமிலும் இலங்கை அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு வெளியே உள்ள முகாம்களில் 30,000 இலங்கை அகதிகள்தங்கியுள்ளனர்.
காஷ்மீரிலிருந்து 53,538 குடும்பத்தினர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்ககும் அகதிகளாக வெளியேறிக் குடியேறியுள்ளனர். வெளியேறிவர்களுள்இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் பிற மதத்தவரும் அடங்குவர்.
ஜம்முவில் மட்டும் 31,940 குடும்பங்கள் வசிக்கின்றன. டெல்லியில் 19,338 குடும்பத்தினர் குடியேறியுள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்களில் 2710குடும்பத்தினர் இடம் பெயர்ந்துள்ளனர். வெளியேறிய குடும்பங்களில் 27,282 பேர் இந்துக்கள், 2303 பேர் முஸ்லீம்கள் மற்றும் 1830 பேர்சீக்கியர்கள். 75 பேர் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள திபெத்திய அகதிகளின் எண்ணிக்கை 1,08,414 பேர் ஆகும். 1959-ம் ஆண்டு மார்ச் மாதம் திபெத்தைசீனா ஆக்கிரமித்தது. இதையடுத்து அங்கிருந்து திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா வெளியேறினார். அதன் பிறகு திபெத்திலிருந்து வெளியேறிஇந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் மட்டுமே இங்கு தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வெளி நாட்டவராகவே கருதப்பட்டுவருகின்றனர்.
1998-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரையிலான கணக்குப்படி இந்தியாவில் 12,255 ஆப்கானியர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர்.
இலங்கை மற்றும் திபெத்திய அகதிகள் மட்டும் அரசின் செலவில் தங்கியுள்ளனர். பிற அகதிகள் முறையான பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில்தங்கியுள்ளனர். இவர்களது விசாக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications