தமிழகத்தில் இன்று
சென்னை:
அடுத்தாண்டு தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஏராளமான வரிச் சலுகைகளை திமுக அரசு வாரி வழங்கிவருகிறது.
மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டிலும் வரி உயர்வு இல்லை. வரிச் சலுகைகளும், வரிக் குறைப்புமட்டுமே இடம் பெற்றன.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் வரிச் சலுகைகளை முதல்வர்கருணாநிதி வாரி வழங்கியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் வரிச் சலுகைகளை தான் வாரிவழங்கியுள்ளோம் என்றார் முதல்வர்.
சட்டசபையில் புதன் கிழமை அவர் கூறுகையில்,
கழிவு பஞ்சு மீதான விற்பனை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும். பி.வி.சி. பைப் மீதானவிற்பனை வரி 18 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படும்.
சைக்கிள் சீட் மீதான விற்பனை வரி 4 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படும். பாலிதீன் பிளாஸ்டிக்பைகள் மீதான விற்பனை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும்.
வணிக சின்னம் பொரிக்கப்பட்ட பால்கோவா மீதான விற்பனை வரி 16 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாககுறைக்கப்படும். பழைய, பயன்படுத்தப்பட்ட கண்ணாடி பாட்டில்கள், சீசாக்கள் மீதான கொள்முதல் வரி 12சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும்.
முகம் பார்க்கும் கண்ணாடி மீதான விற்பனை வரி 16 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும்.ஜக்காளம், கம்பளி போன்ற பொருட்கள் மீதான விற்பனை வரி குறைக்கப்படும்.
இந்த வரிக் குறைப்பு ஜூன் 1ம் தேதி தல் அமலுக்கு வரும் என்றார் முதல்வர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications