தமிழகத்தில் இன்று
டெல்லி:
உணவுப் பொருட்கள், உரங்கள் மற்றம் பெட்ரோலியப் பொருட்களின் விலையைஉயர்த்தியதைத் திரும்பப் பெற முடியாது. இதை தேவையில்லாமல் அரசியலாக்குவதைவிட ஏழ்மை, வேலையில்லாமை ஆகிய முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணஅரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
விலை உயர்வை வாபஸ் பெறக் கோரி காங்கிரஸ் தலைவரும், லோக் சபா எதிர்க்கட்சித்தலைவருமான சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் குழுவினர் புதன்கிழமைபிரதமரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து சோனியாவுக்கு பிரதமர்கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் ஊரக மற்றும் சமூக அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும்எண்ணத்துடன்தான் விலை உயர்வு குறித்து அரசு முடிவு எடுத்துள்ளது. இந்தப்பிரச்சினையை தேவையில்லாமல் அரசியல் ஆக்குவதை கைவிட வேண்டும். இதன் மூலம்அரசின் இலக்கை எட்டும் முயற்சிகள் தடைப்படும்.
நீண்ட கால வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை வாசி உயர்வு அமல்செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பணவீக்கம் வெகுவாககுறையும்.
சமீபகாலமாக அரசு எடுத்து வரும் முடிவுகள் அனைத்தும் ஊரக, சமுதாய வளர்ச்சியைக்கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டவை.
பொருளாதார வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளை அரசியலாக்குவது தேவையில்லாததுஎன்பதை தாங்கள் அறிவீர்கள். இதனால் முக்கிய தேசியப் பிரச்சினைகள் பின்னுக்குத்தள்ளப்படும்.
ஏழ்மை ஒழிப்பு மற்றும் வேலையில்லாமை ஆகியவற்றை ஒழிக்கும் அரசின் முயற்சிகளில்பொறுப்பான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும்.
அரிசி விலை உயர்வை, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு பார்க்க வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications