தமிழகத்தில் இன்று
டெல்லி:
மிகச்சிறிய குற்றங்களுக்காக ஜெயிலில் அடைக்கப்பட்ட பஞ்சாப் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்என்று உள்துறை அமைச்சர் அத்வானி அண்மையில் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். தற்போது பஞ்சாபில்தீவிரவாதிகள் ஆதிக்கம் குறைந்து வருவதுடன், மாநிலத்தில் எங்கும் மிகப்பெரிய அசம்பாவிதச் சம்பவங்கள்எதுவும் நடக்கவில்லை என்றார்.
முன்னாள் பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பணிபுரிந்த கே.பி.எஸ்.கில் பஞ்சாப்பில் தீவிரவாதத்தை ஒடுக்ககடும் முயற்சிகள் மேற்கொண்டார். இவர் அங்கு டிஜிபி யாகப் பணியாற்றிய 7 வருடங்களில் தீவிரவாதத்தைமுழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பஞ்சாப்பில் தீவிரவாதிகளே இல்லை என்று அளவுக்கு இவரதுநிர்வாகத்தின் போது குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைந்தது.
அவரிடம் மத்திய அரசின் திட்டம் குறித்து பேசினோம். பேட்டி விவரம்:
கே: பஞ்சாப்பில் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் விடுவிக்கப்படுவார்களா?
ப: மிக மிக சிறிய குற்றத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்பட்டால் நல்லது. இந்த விடுவிப்பின் முக்கியநோக்கமே பஞ்சாப்பில் தீவிரவாதத்தை ஒடுக்குவது தான். அந்தந்த நேரத்திற்குத் தகுந்தது போல் தீவிரவாதிகள்விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள். இதற்கு முன் மத்திய அரசுடன் மாநில அரசு கலந்தாலோசித்தபின் இதற்கான இறுதி முடிவை எடுக்கும்.
கே: ஜம்முவில் ஹரியத் கமிட்டித் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டதுபோல் ஜெயிலில்அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் விடுதலை செயயப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் அத்வானிகூறியது குறித்து...?
ப: ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதத்திற்குப் பெயர் போன இடம். கைதிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து எந்தமாநிலத்தையும் ஜம்மு-காஷ்மீருடன் ஒப்பீடு செய்யக் கூடாது.
கே: பொதுவாய்ச் சொல்லப்போனால் முஸ்லீம் இனத்தவர்கள் பெரும்பாலும் தடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுகிறார்களே?
ப: அது முற்றிலும் தவறு. முஸ்லீம் கைதிகள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக பிற இனத்தவர்ஜெயிலிலேயே இல்லை என்று கூறிவிட முடியாது.
கே: அத்வானி கூறியதில் அரசியல் நோக்கம் ஏதாவது இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
ப: எல்லா அரசியல் கட்சிகளுமே அரசியல் ரீதியாக சிந்தித்துத்தான் முடிவுகள் எடுக்கின்றன.
கே: பஞ்சாப்பில் தீவிரவாதிகளை விடுதலை செய்வதன் மூலம் பாரதிய ஜனதாக் கட்சி சீக்கியர்களின் ஆதரவைப்பெற முயல்கிறது என்று கூறலாமா?
ப: நான் அப்படி நினைக்கவில்லை. யாருமே கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் பொதுமக்களின் ஆதரவைப் பெற முடியாது.
கே: மிகப்பெரிய குற்றங்களில் தொடர்புடைய தீவிரவாதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றுநினைக்கிறீர்களா?
ப: தேசிய ஒருமைபாட்டை நிலைநிறுத்துவதும், தேசியப் பாதுகாப்பைச் செம்மைப்படுத்துவதும் அரசின் கடமை.தீவிரவாதச் செயல்கள் ஏதும் புரியாமல் ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டால்சந்தோஷப்படுகிற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.
கே: ஜம்முவில் ஹிரியத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து உங்கள் கருத்து ..?
ப: உண்மையிலேயே அவர்கள் தவறு எதுவும் செய்யாமல் இருந்தால் அவர்களை விடுதலை செய்வதில்தவறேதுமில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications