கிரிக்கெட் சூதாட்டம்: பிந்த்ராவிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு
புது தில்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ்.பிந்தாராவிடம் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தன்னிடம்ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய பிந்த்ரா, சில தினங்களுக்கு முன் சிபிஐ அலுவகத்துக்கு நேரில் வந்து வாக்குமூலம்அளித்தார். மேலும் சுமார் 360 பக்க அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
பிந்த்ராவின் அந்த அறிக்கையை சிபிஐ அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். அறிக்கை பரிசீலித்து முடித்த பிறகுபிந்த்ராவிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த சில தினங்களிகில்பிந்த்ராவின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டுவிடும். அதற்குப் பிறகு இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம்பிந்த்ராவிடம் விசாரணை நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பிந்த்ராவும், சிபிஐயிடமிருந்து விசாரணைக்கு வரும்படி தகவல் வந்துள்ளதாகவும், அதற்கு எழுத்து மூலம் பதில்அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ தீவிரமாகவிசாரித்து வருகிறது. விசாரணையை முடிக்க காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், விரைவில்விசாரணையை முடித்து அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி சிபிஐ அதிகாரிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே, தன் மீது அவதூறான கருத்துக்களைக் கூறியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமுன்னாள் தலைவர் பி.எம். ருங்தா, தற்போதைய துணைத் தலைவர் கமால் மொரார்கா ஆகியோருக்கு பிந்த்ராகடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாரியத் தலைவராக இருந்தபோது சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக பிந்த்ரா மீது ருங்தாவும், மொரார்காவும்குற்றம் கூறியிருந்தனர். இதை பிந்த்ரா மறுத்துள்ளார். ருங்தாவும், மொரார்காவும் என் மீது கூறியுள்ளகுற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. பொய்யானவை. அவர்களுடைய குற்றச்சாட்டுகள் குறித்து வாரியத்துடன் பேசிநடவடிக்கை எடுப்பேன் என்றார் பிந்த்ரா.
இந் நிலையில், கபில்தேவ் மீது பிந்த்ரா கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எந்த நடவடிக்கையிலும்ஈடுபடக்கூடாது என்று மனோஜ் பிரபாகருக்கு கட்டுப்பாட்டு விதித்துள்ளதாக கூறப்படும் செய்திகளை சிபிஐமறுத்துள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம். பிந்த்ரா கூறிய குற்றச்சாட்டுகள்,தாங்கள் நடத்தி வரும் விசாரணை போன்றவை குறித்து யாரிடமும், எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.தகவல்களை வெளியிடக்கூடாது என்று யாரையும் கட்டுப்படுத்தவில்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications