• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உபெர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனா-டென்மார்க் இறுதி மோதல்

By Staff
|

கே: பெரியாரின் துணிவு, அண்ணாவின் அறிவு, எம்.ஜி.ஆரின் கனிவு -இவை அனைத்தும் அண்ணா அறிவாலயத்தில்தான் உள்ளது - என முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவருமான ரகுபதிகூறியுள்ளாரே?

ப:அதுமட்டுமா?இப்போது, முன்னாள்அ.தி.மு.க.வினரின் பணிவும் அங்குதான் இருக்கிறது?

கே: கிருஷ்ணா நீர் வந்து விட்டதே. இப்போது என்ன சொல்கிறீர்கள்?

ப: எத்தனை சொட்டு?

கே: புத்திசாலித்தனம் - தந்திரம் - என்ன வித்தியாசம்?

ப:புத்திசாலித்தனம் மனிதர்களுக்கு மட்டுமே உரியது. தந்திரம் சில மனிதர்களிடமும் காணப்படும்; பல மிருகங்களிடமும் காணப்படும்.

கே: துக்களக் பத்திரிக்கையின் சர்வாதிகாரி எனத் தங்களை அழைக்கலாமா?

ப:பாராட்டுவதற்கு முன் யாராவது அனுமதி கேட்பார்களா?

கே: ஊழல் வாதி, தீவிரவாதி -இவர்களில் நாட்டுக்கு அபாயகரமானவர்யார்?

ப: திருடன், நெருப்பு வைப்பவன் - இருவரில் , மிகவும் ஆபத்தானவன் எவன்? நெருப்பு வைப்பவன் தானே? அந்த மாதிரிதான் இதுவும்.

கே: நம் நாட்டில் எதற்குப் பஞ்சம் இருந்தாலும் போராட்டங்களுக்கும்,ஸ்ட்ரைக்ககளுக்கும் பஞ்சமே இராது போல் உள்ளதே?

ப: பஞ்சம் வராது. இதில் எங்காவது வறட்சி ஏற்படுகிற மாதிரி அறிகுறி தோன்றினால்,உடனே கம்யூனிஸ்ட்டுகள் ஓடிச் சென்று நிவாரண்ப் பணிகளில் ஈடுபட்டு, பஞ்சம் தோன்றாமல் பார்த்துக் கொள்வார்கள்.

கே: ராஜஸ்தான் மாநில பெண் எம்.எல்.ஏ., ஒருவர் பரீட்சை எழுதும் போது காப்பியடித்ததாக பிடிப்ட்டுள்ளது பற்றி?

ப: இது என்ன புது விஷயமா? கருணாநிதி.ய காப்பியடிக்க முயன்றுஜெயலலிதா பிடிபடவில்லையா?

கே: புலிகளின் விசுவாசத் தலைவர்களின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாதா?

ப: முடியும்.

கே:பாரதீய ஜனதா கூட்டணியிலிருந்து மதச்சார்பற்ற கட்சிகள் வெளியேறவேண்டும் என்று ஜோதிபசு கூறியுள்ளாரே?

ப: அப்படிஎன்றால், பா.ஜ.க.வே வெளியேற வேண்டியிருக்குமே!

கே: இலங்கைக்கு, பாகிஸ்தான் - இஸ்ரேல் ஆதரவளித்தால்...?

ப: இஸ்ரேல் ஆதரவளித்தால், அறிவிக்கப்படாத ஒத்துழைப்பே கூட இருக்கலாம்.பாகிஸ்தான் ஆதரவளித்தால், அறிவிக்கப்படுகிற எதிர்ப்பு இருக்கும்.

கே: இப்போது இலங்கை நிலவரத்தில் கருணாநிதியின் நிலை பற்றி...?

ப: அவர் மத்திய அரசின் நிலையை முழுமையாக ஆதரிக்கிறார். ஈழம் தோன்றுவதுநல்லதல்ல; இந்தியாவினால் அதை ஏற்க முடியாது என்பது மத்திய அரசின் நிலை.ஈழம் தோன்றுவது மகிழ்ச்சிகுரியது என்பது கருணாநிதியின் நிலை. ஆனால் அவர்மத்திய அரசின் நிலையைத்தான் ஆதரிக்கிறார். அதாவது, வந்து, இது, ...இல்லை.என்னால் இதற்கு மேல் தெளிவாக அவருடைய நிலையை விளக்க முடியவில்லை.

கே; உடல் மண்ணுக்கு உயிர் ஜெயலலிதாவுக்கு என தினகரன்கோஷமிட்டிருப்பது எதைக் காட்டுகிறது?

ப: அதிகப்பிரசிங்கித்தனமாக இருக்கிறதே! உயிர் ஜெயலலிதாவுக்கு என்றால் -ஜெயலலிதா என்ன, எமனா?

கே: பெயருக்கு முன்னால் ரஜினி பெயரைச் சேர்த்து கேள்வி கேட்டால்தான்வெளியிடுவீர்களா?

ப: அப்படி ஒன்றுமில்லை. பெயருக்கு பின்னால் ரஜினி பெயரைச் சேர்த்தாலும்கேள்வியை வெளியிடுகிறேன்.

கே: நாம் அனைவரும். எதை ஒரு எல்லையுடன் போதும் என்று திருப்திஅடைவோம்?

ப: சாப்பாடுதான். அது ஒன்றுதான் போதும் என்ற வார்த்தையை நம்மிடமிருந்துவரவழைக்கும். அன்னதானம் உயர்வாகக் கருதப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

கே: அ.தி.மு.க, அரசு பங்களாக்களை கட்டியது; தி.மு.க. அரசு பாலங்களைகட்டுகிறுது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளாரே?

ப: பங்களாக்களை கட்டியவர்கள் இடிந்து விட்டார்கள், பாலங்களை கட்டியவர்கள்இடிய வேண்டாம்- பாலங்கள் இடியாமல் இருந்தாலே போதும். அவற்றைப் பற்றிவரும் தகவல்கள் கவலை தருகின்றன.

கே; இலங்கைப் பிரச்சனையில் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால்,மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளாரே?

ப:எப்படி? நாங்களும் சிங்களர்களும் சகோதரர்கள்; எங்களுக்குள் உள்ளபிரச்சனையில், அன்னியர்களான இந்தியர்கள் தலையிடக்கூடாது என்று முன்பு கூறியவிடுதலைப் புலிகள், இந்த முயற்சியை வரவேற்பார்களா? அப்படி அவர்கள்ஏற்றாலும், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் - ராஜீவ் கொலையில்முதல் குற்றவாளியான அதன் தலைவருடன் - அமர்ந்து இவர் சமாதானம் பேசுவதா?

கே: இலங்கைப் பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்குசங்கடம் ஏற்படுத்துவது பற்றி...?

ப: ஒன்று மத்திய அரசின் நிலையை ஏற்று, வேறு கருத்தைப் பேசாமல் இருங்கள்;அல்லது கூட்டணியை விட்டு விலகி, மந்திரி பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டுப் போய் உங்கள் இஷ்டத்துக்கு பேசி, சட்டத்தை சந்தியுங்கள் என்று பிரதமர்இவர்களிடம் கூறிவிட்டால் - சங்கடம் ஒரே நாளில் தீரூம். பதவிகளை விடமாட்டார்கள். சங்கடம் மறையும்.

கே: தாங்கள் ஒரே ஒரு நாள் முதல் மந்திரியாக பொறுப்பு வகித்தால்,என்னென்ன காரியங்களை உடனடியாக நிறைவேற்றுவீர்கள்?

ப: இப்போது சினிமா கதை எழுதுவதாக எனக்கு உத்தேசமில்லை.

கே: அதிக அளவில் பெண் கைதிகள் தமிழகத்தில்தான் உள்ளனராமே?

ப: ஒன்று செய்யலாம். பெண் கைதிகளை எல்லாம் விடுதலை செய்து விட்டு,இந்தியாவிலேயே பெண் விடுதலையில அதிகம் சாதித்தது தமிழகம் தான் - என்றுகூறிக் கொள்ளலாம்.

கே: சோ அண்ணா! நீங்கள் எம.பி.யாகி விட்டீர்கள். நீங்கள் ஒரு கட்சிஆரம்பித்தால், துக்ளக் வாசகர்களான நாங்கள் எம்.எல்.ஏ.ஆக மாட்டோமா?

ப: தம்பிக்கள் எம்.எல்.ஏ. ஆவதை நான் விரும்பவில்லை,. அவர்கள் உருப்படியாகஏதாவது செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன்.

கே: திராவிட இயக்கங்களில் காயம்பட்டவர்களுக்கு சரணாலயாமாகஅறிவாலயம் உள்ளது என்கிறாரே கருப்பசாமி பாண்டியன்?

ப: ஓஹோ! அப்படியானால் ,நலமாக இருப்பவர்களுக்கு உரிய இடம் இல்லையாஅது? காயம் பட்டால் அட்மிட் ஆகிற இடமா? அண்ணா அறிவாலயம், அண்ணாஆஸ்பத்திரியாகி விட்டதே பலே!

கே: தனி ஈழம் அறிவிக்கப்பட்டால், இலங்கை இனப் பிரச்சனை தீர்ந்துவிடுமா?

ப: ஏற்கனவே தனி ஈழம், வரதராஜப் பெருமாளால் அறிவிக்கப்பட்டதே,நினைவில்லையா? இப்போது விடுதலைப் புலிகள் அறிவித்தால் யார்அங்கீகரிப்பார்கள்? தாலிபானா?பிரச்சனை இன்னும் கடுமையாகும். இங்கேராணுவத்தினர் வசம் யாழ்ப்பாணம் இருந்த போது, அவர்களோடு ஒத்துழைத்ததுரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு. ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள்விடுதலைப் புலிகளால் தண்டிக்கப்படுவார்கள்; அதாவதுஃபணால்! முன்பு இந்தியஅமைதிப்பட்ைக்கு ஒத்துழைத்தார்கள் என்று கூறி, ஆயிர்க்கணக்கான தமிழர்கள்கொல்லப்படவில்லையா?

கே: தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கலாம் என்று நீங்கள் யாரை சிபாரிசுசெய்வீர்கள்?

ப: இது சம்பந்தமாக,ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவருக்கும், எனக்குமிடையே நடந்தஉரையாடலைச் சொல்கிறேன்.

அந்த காங்கிரஸ் தலைவர்: தமிழகத்தில் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம்என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

நான்: நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும், இப்போது இருக்கிற இதே கதிதான்தொடரும். யார் வந்தாலும், மற்றவர்கள் எதிர்ப்பார்கள்.

காங்கிரஸ் தலைவர்: அது புரிகிறது. நாங்கள் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்என்கிறீர்களா?

நான்: அப்படிச் சொல்லவில்லை. தலைவரை மாற்றுவதால், கட்சியில் ஒரு மாற்றமும்ஏற்படாது; வீழ்ச்சியும் இருக்காது, வளர்ச்சியும் இருக்காது.

காங்கிரஸ் தலைவர்: என்னதான் செய்யலாம்?

நான்: மூப்பனாரைக் கெஞ்சி கேட்டு, அவரை வைத்துக் கொண்டு முடிவெடுங்கள்.

காங்கிரஸ் தலைவர்: அவர் ஒப்புக் கொள்வாரா?

நான்: மாட்டார். அந்த தைரியத்தில்தான் சொல்கிறேன்.

கே: கிர்ககெட் விளையாடியதற்காக வெட்க்ப்படுகிறேன் என்று கபில்தேவ்கூறியுள்ளாரே?

ப: பார்ப்பதற்காக நாமே வெட்கப்படவில்லை - இவர்களுக்கு என்ன வெட்கம்வேண்டியிருக்கிறது!

கே:உருப்படியாக ஒரு மணி நேரம் செலவாக வேணடும். அதற்கு டி.வி.பார்க்கலாமா? துக்ளக் படிக்கலாமா?

ப: இதில் என்ன குழப்பம்? டி.வி. பார்த்துக்கொண்டே துக்ளக் படியுங்கள். என்னபார்த்தோம் என்பதும் தெரியாது. என்ன படித்தோம் என்பதும் புரியாது. நிம்மதியாகஇருக்கலாம் ஒரு குழப்பமும் இல்லாமல் ஒரு மணி நேரம் உருப்படியாகச்செலவழியும்.

கே: துக்களக்கில் சிறுவர்களுக்காக ஒரு பக்கத்தை ஒதுக்கினால் என்ன?

ப: துக்களக்கே சிறுவர்கள் பத்திரிக்கைதானே! மாயஜாலக் கதைகள், வனவிலங்குகள்பற்றிய கதைகள், புதிர்கள், தமாஷ்...போன்றவைதானே சிறுவர் பத்திரிக்கைக்குரியலட்சணங்கள். அரசியல் பற்றியும், அரசியல்வாதிகள் பற்றியும் எழுதுகிற துக்ளக்கில்,இந்த அம்சங்கள் அடங்குகின்றனவே! அப்புறம் ஏன் இதில் இவர்களுக்கு தனியாக ஒருபக்கம்?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more