தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் உள்ள அனைத்து மக்கள் பாதுகாப்பு கமிட்டிகளை தயார் நிலையில் இருக்கும்படி அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் வட பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வரும்இந் நேரத்தில் இத்தகைய அறிவிப்பை சந்திரிகா வெளியிட்டுள்ளார்.
கிழக்கு மட்டக்களப்பில் உள்ள புத்த கோயிலுக்கு அருகே புதன்கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இக் குண்டுவெடிப்பில் 20 பேர் இறந்தனர். 60 பேருக்கு மேல் காயமடைந்தனர். இச் சம்பவத்தால், அப் பகுதியில் இனக்கலவரம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்கும்படி மக்கள் பாதுகாப்புகமிட்டிகளை அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மனிதாபிமானமற்ற முறையில் மிகவும் மோசமான தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களின் நடவடிக்கையால் வட பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு சிங்கள தீவிரவாதிகளால் எந்த பாதிப்பும்ஏற்படாத வகையில் அவர்களைக் காக்க அனைத்து தரப்பு மக்களும் முன் வரவேண்டும் என்றும் சந்திரிகாகூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தி வருவதைஅடுத்து அங்கு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, நாட்டை போர்முனையில்நிறுத்தும் பொருட்டு கடந்த மாதம்தான் மக்கள் பாதுகாப்பு கமிட்டிகளை அரசு உருவாக்கியது.
இதற்கிடையே, கொழும்பு நகரில் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பை இலங்கைராணுவம் அதிகப்படுத்தியுள்ளது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications