தமிழகத்தில் இன்று
மாஸ்கோ:
அமெரிக்க தயாரிப்பான தரையிலிருந்து ஹெலிகாப்டர்கள், விமானங்களைத் தாக்கும் ஏவுகனைகளுடன் (ஸ்டிஞ்சர்ஸ்) செச்னியாவில் உள்ள ரஷியத் துருப்புகள் மீதுபுதிய தாக்குதலைத் தொடுக்க ஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ரஷிய செய்தி நிறுவனமான நொவோஸ்தி செய்திவெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையிலிருந்து செச்னியாவில் உள்ள ரஷியத் துருப்புகள் மீது முழுமையான தாக்குதல் தொடுக்கப்படும் என்று செச்னியாவில் தனி நாடு கோரிபோராடி வரும் தீவிரவாதிகளின் தலைவர் அஸ்லன் மஸ்கதோவ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் "சாம் ஏவுகனைகளுடன்தலிபான் தீவிரவாதிகள் செச்னியா வரவுள்ளதாக நொவோஸ்தி செய்தி வெளியிட்டுள்ளது.
செச்னியாவிலுள்ள ரஷிய ராணுவத் தலைமையகத்தில் புதன்கிழமை இதுகுறித்து ராணுவத் தளபதிகள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
செச்னியாவில் தலிபான் தீவிரவாதிகளின் புதிய படைப் பிரிவு நுழைவதற்கான அதிகபட்ச சாத்தியக் கூறுகள் உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த ஜார்ஜியா நாடு வழியாக இவர்கள் செச்னியாவுக்குள் வரத் திட்டமிட்டுள்ளதாகவும் கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.
ரஷியாவுக்கும், ஜார்ஜியாவுக்கும் இடையிலான எல்லை, மலைகளால் சூழப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தலிபான் தீவிரவாதிகள், ஜார்ஜியா வழியாக செச்னியாவுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஜார்ஜியா அறிவித்துள்ளது.செச்னியாவில் பிரிவினைவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு ஜார்ஜியா மண்ணில் இடமில்லை என்று அந்நாட்டு அரசு தெளிவாக கூறியுள்ளது.
தீவிரவாதிகளுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை:
இதற்கிடையே, மறுபடியும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செச்னியா தீவிரவாதிகளுக்கு ரஷியபாதுகாப்புஅமைச்சர் இகர் செர்ஜியேவ் எச்சரித்துள்ளார்.
மாஸ்கோவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்திற்குள் செச்னிய நிலைமைமோசமாகு. தற்போதுள்ளபனி அக்காலகட்டத்தில் விலகத் துவங்கி, மலைப் பாதை தெளிவாகி விடும்.
தீவிரவாதிகளிடமிருந்து பிடித்துள்ள எல்லைப் பகுதிகளில் ரஷிய ராணுவம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தரை மார்க்கமாக தீவிரவாதிகள்நுழைய முயன்றால் கடுமையான பாடம் கற்றுக் கொடுக்கப்படும் என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications