தமிழகத்தில் இன்று
சென்னை:
பிரதமர் தலைமையிலான காவரி நதி நீர் ஆணையத்தால் ஒரு பிரயோசனமும் இல்லை.அதற்கு பதிலாக நான்கு மாநில அதிகாரிகள் கொண்ட ஆணையத்தை அமைக்கவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா யோசனைதெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் வெள்ளியன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைவருமாறு:
பிரதமர் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஒருமுறை கூட பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. அது மட்டுமின்றி இந்தஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் பிரதமரோ உறுப்பினர்களாக இருகிறநான்கு மாநில முதலமைச்சர்களோ கூடி பேச வேண்டும் என்பதில் எந்த விதஅக்கறையும காட்டவில்லை.
காவிரி நதி நீர் ஆணையம் கடந்த எட்டு மாதக் காலத்தில் இரண்டு முறை கூடுவதற்கானதேதி குறிப்பிடப்பட்டு பின்னர் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காவிரி நதி நீர்ஆணையம் அமைக்கப்பட்ட போது இதை ஒரு மிகப் பெரிய சாதனையாகசொன்னார்கள். ஆனால் இதுவரை பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்த ஆணையம் எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை.
டெல்லியில் பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டம்19.5.2000 அன்று நடப்பதாக ஏற்கனவே தேதி குறிப்பிடப்பட்டு மத்திய அரசில்இருந்துஉரிய முறையில் கடிதம் எழுதப்பட்டும் இப்போது திடீரென்று கர்நாடக மாநிலமுதலைமைச்சர் பிரச்சனையை திசைத் திருப்பி ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்கும்சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்.
இத்தகைய முரண்பாடுகள் உருவாகும் என்பதால் தான் முதலமைச்சர்கள் அடங்கியஆணையம் அமைக்கப்படும் என்று நான் பலமுறை வற்புறுத்தினேன். பிரதமர் மற்றும்முதலைமைச்சர்களை விட அதிகாரிகள் பெரியவர்களா என்று அன்றைக்கு கேலிபேசியவர்கள் இன்றைக்கு அதன் பலனை அனுபவிக்கிறார்கள்.
காவிரி நதி நீர் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மாநில முதலமைச்சர்கலந்து கொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்ததால் அந்த ஆலோசனைக் கூட்டமேரத்து செய்ய வேண்டிய நிலை தான் இருக்கிறது. அவரை கட்டாயப் ப-டுத்தியோஅல்லது அவர் சார்பில் வேறு எவருமோ கலந்து கொண்டு ஆணையக் கூட்டத்தைநடத்துவதற்கு எந்த விதமான வழிமுறையும் புதிய வரைவுத் திட்டத்தில் இல்லை என்று-ஜெ-ய-ல-லி-தா கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications