நிதி மோசடி: கைதாகிறார் மனோஜ் பிரபாகர்
லக்னெள:
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சில வீரர்கள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியவருமான மனோஜ்பிரபாகர் மீது நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான மனோஜ் பிரபாகர், இந்திய அணி வீரர்கள் சிலர் லஞ்சம் வாங்கியதாகவும்,தனக்கும் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறினார். இவரது குற்றச்சாட்டுகள் குறித்துசிபிஐ விசாரணை நடந்து வருகிறது. லஞ்ச ஊழலில் ஈடுபட்ட வீரர்கள் பெயரையோ, தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த வீரரின் பெயரையோ இன்னும் அவர் தெரிவிக்கவில்லை.
அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில், அவர் மீது நிதிமோசடிக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. உத்திரப் பிரதேச மாநிலம் நைனிடால் போலீஸில் அவர் மீது புகார்கள்வந்துள்ளன. அபேஸ் லீசிங் அண்ட் பைனான்ஸ் கம்பெனி" என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த பிரபாகர்,தனது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருந்த ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாகப்புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இவ் வழக்கில்மனோஜ் பிரபாகர் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் நைனிடால் மாவட்ட உயர் போலீஸ்அதிகாரி அகிலேஷ் மல்ஹோத்ரா தெரிவித்தார். இதுவரை இவ் வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லைஎன்றும் அவர் கூறினார்.
மனோஜ் பிரபாகர் நிர்வாக இயக்குநராக உள்ள இந்த நிதி நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தும்படி கடந்தஜனவரியில் தான் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. ஆனால், இந்த நிறுவனத்துக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இதன் அனைத்து கிளைகளும் சீல்வைக்கப்பட்டன.
நிதி மோசடியில் மனோஜ் பிரபாகர் ஈடுபட்டிருக்கமுடியாது என்று கூறும் அவரது ஆதரவாளர்கள், இந்த மோசடிப்புகார்களுக்கு பிரபாகரின் தொழில் கூட்டாளி திவ்யா நவுதியால்தான் காரணம் என்று தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications