தமிழகத்தில் இன்று
டெல்லி:
"ராயல் பெங்கால் டைகர் என அழைக்கப்படும் வங்கப் புலி, பூடான் காட்டில் காணப்பட்டதாக பூடான் வனத்துறைகூறியுள்ளது.
வங்கப் புலி, தெற்காசியாவில் அதிக அளவில் காணப்படுகிறது. இருப்பினும் குறைந்த உயரம் கொண்டபகுதிகளிலேயே இவை உள்ளன. ஆனால் முதல் முறையாக பூடானில் உள்ள திரும்சிங்க்லா தேசியப் பூங்காவில்3000 அடி உயரத்தில் இந்த வகைப் புலி காணப்பட்டதாக பூடான் வனத்துறையினர் சமீபத்தில் எடுத்த படத்தின்மூலம் தெரிய வந்துள்ளது.
புலிகள் கணக்கெடுப்பின் போது பயன்படுத்தப்படும் கருவி மூலம் இந்தப் புலி இருப்பது தெரிய வந்தது.கணக்கெடுப்புக் குழுவுக்குத் தலைமை வகித்த வனத்துறை உயிரியல் நிபுணர் பிரலாத் யான்ஸோன் பத்திரிகைஒன்றுக்கு அளித்த பேட்டியில், அதிக உயரம் கொண்ட பகுதிகளில் வங்கப் புலிகள் இருப்பதாக ஊகம் மட்டுமேஇருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
புலிகள் பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்திகளை மாற்றிக் கொள்ள இது உதவும்.
1996-ம் ஆண்டு முதல் பூடானில் இதுவரை ஐந்து முறை புலிகள் கணக்கெடுப்பு நடந்துள்ளது. காடுகளில்மனிதர்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் புலிகள் வேறு இடங்களுக்குச் சென்று விடுகின்றன. இதனால்அவை குறித்த உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை.
பூடானில் மொத்தம் 70 முதல் 80 வயதான ராயல் பெங்கால் டைகர்கள் உள்ளன. குட்டிகளையும் சேர்த்தால்மொத்தம் 115 முதல் 150 புலிகள் வரை இருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications