குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள பிசி-சி-ஐ உதவி கோரு-கி-றார் கபில் தேவ்
டெல்லி:
தன் மீது கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்திடமிருந்து சட்டம் மற்றம் நிதி உதவியை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கபில் தேவ்கோரியுள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லஞ்சம் வாங்கியதாகவும் தனக்கும் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும்முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அவர்களின் பெயரை அவர்இதுவரை வெளியிடவில்லை.
ஆனால், மனோஜ் பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தது கபில் தேவ்தான் என்ற பெரிய அதிர்ச்சியானதகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா தெரிவித்தார். இக்குற்றச்சாட்டை மறுத்த கபில் தேவ், பிந்த்ரா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கிடையே, தான் கபில் தேவ் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தபிந்த்ரா, தான் கூறிய மற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐயிடம் 360 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
தில்லியில் வியாழக்கிழமை கூடிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயற்குழுவில், கிரிக்கெட் வாரிய அதிகாரிகள்மீது குற்றச்சாட்டுகள் கூறிய பிந்த்ராவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.நோட்டீஸை ஏற்றுக் கொள்வதாக பிந்த்ராவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தனக்கு சட்ட உதவியையும், நிதி உதவியையும்அளிக்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைக் கபில் தேவ் கோரியுள்ளார். இத் தகவலை,வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரியத்தின் செயற்குழுவில் தெரிவித்த வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா, கபில்தேவ் உள்பட குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் வாரியம் உதவும் என்றார்.
சிபிஐ விசாரணையில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அனைவருக்கும் வாரியம் ஆதரவாகவேஇருக்கும் என்றார் அவர்.
உதவி கோரி தான் வாரியத்துக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அக் கடிதம் அவர்களுக்குக்கிடைத்துவிட்டதா என்று தெரியவில்லை என்றும் கபில் தேவ் தெரிவித்தார். தற்போது அவர், ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களுக்கு புனேயில் பயிற்சி அளித்து வருகிறார்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.இதுவரை 5 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள சிபிஐ, பிந்த்ராவிடமும் விசாரணை நடத்தப்படும் என்றுதெரிவித்துள்ளது. கபில் தேவிடமும் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்ற தெரிகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications