மே.இ.தீவுகளுடனான 2 வது டெஸ்ட் போட்டி: நசீர், வாசிம் சிறப்பான துவக்கம்
Subscribe to Oneindia Tamil
பிரிட்ஜ்டவுன்:
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துவக்க ஆட்டக்காரர்கள் இம்ரான் நசீர் மற்றும் முகம்மது வாசிம் இருவரும்சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்துஆட்டமிழக்காமல் உள்ளனர்.
போட்டி, கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. பாகிஸ்தான் அணி வீரர் நசீர் மிகச்சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தார். இது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. துவக்கம் முதலே, முகமது வாசிமும், இம்ரான் நசீரும் சேர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் திணறடித்தனர்.
முன்னதாக ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 398 ரன்கள் எடுத்தது. புதிய வீரர் ராம் நரேஷ் சார்வான்மிகச்சிறப்பாக ஆடினார். அவர் 84 ரன்கள் எடுத்தார். அவரை அவுட்டாக்குவது பாகிஸ்தான் அணியினருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications