தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்ப்பாணம் அருகே சாவகச்சேரி நகரில் இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகளும் நேரடிப் போரில் ஈடுபட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் புதிய கட்டத்திற்கு வந்துள்ளது. இதுவரை நேரடித் தாக்குதலைத் தவிர்த்து விட்டு, கொரில்லா தாக்குதலில்ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள், முதல் முறையாக ராணுவத்துடன் நேரடி மோதலில் இறங்கியுள்ளனர்.
சாவகச்சேரியைப் பிடித்து விட்டதாக சனிக்கிழமை விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். ஆனால் அதை ராணுவம் மறுத்துள்ளது. சாவகச்சேரி அருகேவிடுதலைப் புலிகளுடன், ராணுவம் நேரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
சாவகச்சேரி நகருக்கு வெளியே உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இலங்கை விமானப் படை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசித் தாக்கியதாகராணுவம் கூறியுள்ளது. இப்பகுதியில் இரு தரப்பினரும் கடுமையான நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்று ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொடிகாமம் நோக்கி புலிகள் முன்னேற்றம்:
இதற்கிடையே, சாவகச்சேரிக்கு அடுத்து யாழ்ப்பாணம் அருகே உள்ள மற்றொரு முக்கிய நகரான கொடிகாமம் நோக்கி விடுதலைப் புலிகள் முன்னேறிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் அருகே கிழக்கில் உள்ளது கொடிகாமம். இந்த இடத்தைப் புலிகள் பிடித்து விட்டால், யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை ராணுவத்தினருக்கானஅனைத்துச் சாலைப் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டு விடும்.
யானை இறவிலிருந்து தற்போது சாவகச்சேரி வரை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது புலிகளுக்கு கொடிகாமம் மட்டுமேஅவர்களது கட்டுப்பாட்டில் இல்லாமல் உள்ளது.
பலாலி விமான தளத்தில் போக்குவரத்து நிறுத்தம்:
இதற்கிடையே, யாழ்ப்பாணத்திலுள்ள ஒரே துறைமுகமான காங்கேசன் துறை துறைமுகத்தில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும்நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல, பலாலி விமான தளத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது..
இரு இடங்களிலும் விடுதலைப் புலிகள் தீவிரஆர்ட்டில்லரி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும் அத்தியாவசியப் பொருட்கள் இன்னும் பலாலி விமான தளம் மூலமாக கொண்டு செல்லப்படுவதாக ராணுவம் கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications