கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
மும்பை:
ராஜஸ்தானில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனிற்காக மகாராஷ்டிரா முதல்வர் விஸ்லாராவ் தேஷ்முக் ரூ ஒரு கோடிக்கான காசோலையைராஜஸ்தான் முதல்வர் அசோக் ஜெல்லட்டிடம் கொடுத்தார்.
ராஜஸ்தானில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. மக்கள் தொடர்ந்து பசியும், பட்டினியுமாய் அல்லல் பட்டு வருகிறார்கள். அவர்களுக்குப்போதிய குடிநீர் கிடைப்பது பெரும் பாடாக உள்ளது.
இதைத் தவிர்க்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையும் வகையிலும் மகராஷ்டிரா அரசு ரூ 1 கோடிக்கான காசோலையை நிவாரணத்தொகையாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலை திங்கள்கிழமை ராஜஸ்தான் முதல்வர் அசோக் ஜெல்லட்டிடம் வழங்கப்பட்டது. காசோலையைமுதல்வர் தேஷ்முக் வழங்கினார்.
மேலும் ராஜஸ்தான் மக்களுக்காக மகாராஷ்டிரா அரசு நிலங்களையும் அளித்துள்ளது. மும்பையில் ராஜஸ்தான் பவன் அமைப்பதற்கு தங்கள் அரசு முடிவுசெய்துள்ளதாகவும் விழா ஒன்றில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா முதல்வர் தேஷ்முக் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications