--கி-ரிக்------கெட் மேட்ச் பிக்-சிங்: -"வா-யால் கெட்-ட பிர-பா--கர்"
டெல்லி:
கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உண்மையைக் கூறவில்லைஎன்றால் மனோஜ் பிரபாகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியதலைவர் ஏ.சி. முத்தையா தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், தனக்கு ஒரு வீரர் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும் 3ஆண்டுகளுக்கு முன்பே மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டினார். அவரைத் தொடர்ந்து பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள்மீதும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், இதுவரை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் பெயரை பிரபாகர் வெளியிடவில்லை. இந் நிலையில்,கிரிக்கெட் சூதாட்டம் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுவரைபலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது கபில் தேவ்தான் என்று கூறிய இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா, அது தொடர்பான ஆதாரங்கள் இல்லை என்றுதெரிவித்தார். இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு சிபிஐ அலுவலகத்துக்குச் சென்று தான் கூறிய மற்றகுற்றச்சாட்டுகள் தொடர்பாக சுமார் 360 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அளித்தார்.
இந் நிலையில், பிரபாகர் தான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து உண்மைகளைத் தெரிவிக்கவில்லை என்றால் அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ.சி. முத்தைய எச்சரித்துள்ளார். ஏற்கெனவே, கிரிக்கெட் வீரர்கள்மீதும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிய பிந்த்ராவுக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் புகார்களை விசாரித்து வரும் சிபிஐ அலுவலகத்துக்கு பிரபாகர் நேரில் சென்று விளக்கம் அளிப்பார் என்றுஎதிர்பார்க்கிறேன். ஏனெனில் அவர் தான் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும்என்று கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூற வந்தார். உண்மையைச் சொல்லாத பட்சத்தில் அவர் மீது வாரியம் கடும்நடவடிக்கை எடுக்கும்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு 3 வாரங்களாகியும், பிரபாகர் இன்னும் சிபிஐயிடம் ஏன் விளக்கம்தெரிவிக்கவில்லை என்று தெரியவில்லை. அவரது திட்டம் என்ன என்றும் தெரியவில்லை.
தான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கும்படி பிந்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ஆனால், பிந்த்ரா அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார் முத்தையா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications