மேட்ச் பிக்சிங்: அமலாக்கப் பிரிவு விசாரணை தொடக்கம்
மே 22, 2000
குயிலும் மாடும்
(இரண்டாம் பாகம்)
வாலிலடி பட்டு மனமகிழ்வேன் மா வென்றே
ஓலிடு நம் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்
மேனியிலே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்
கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து நீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்
காளை யெருதரே காட்டிலுயர் வீரரே
தாளைச் சரணடைந்தேன்: தையலெனைக் காத்தருள்வீர்
காதலுற்று வாடுகிறேன்: காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன் (60)
ஆனாலும் என் போல் அபூர்வமாங் காதல் கொண்டால்
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?
ஒத்த குலத்தவர் பால் உண்டாகும் வெட்கமெலாம்
இத்தரையில் மேலோர் முன் ஏழையர்க்கு நாணமுண்டோ?
தேவர் முன்னே அன்புரைக்கச் சிந்தை வெட்கங் கொள்வதுண்டோ ? (65)
காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்?
ஆசைதான் வெட்கம் அறியுமோ? என்றுபல
நேசவுரை கூறி நெடிதுயர்த்துப் பொய்க்குயிலி
பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை
எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே (70)
காதல், காதல், காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்
பாட்டு முடியும் வரை பாரறியேன், விண்ணறியேன்
கேட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!
தன்னை யறியேன், தனைப்போல் எருதறியேன்!
பொன்னை நிகர்த்த குரல் பொங்கி வரும் இன்பமொன்றே
கண்டேன், படைப்புக் கடவுளே! நான்முகனே! (75)
பண்டே யுலகு படைத்தனை நீ என்கின்றார்
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்
காற்றை முன்னே ஊதினாய் காணரிய வானவெள
தோற்றுவித்தாய், நின்றன் தொழில் வலிமையார றிவார்? (80)
உள்ளந் தான் கவ்வ ஒரு சிறிதுங் கூடாத
கொள்ளை பெரியவுருக் கொண்ட பலகோடி
வட்டவுருறைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஒட்டுகின்றாய்
எல்லா மசைவில் இருப்பதற்கே சத்திகளைப்
பொல்லாப் பிரமா, புகுத்துவிட்டாய் அம்மாவோ! (85)
காலம் படைத்தாய், கடப்பதிலாத் திக்கமைத்தாய்:
ஞாலம் பலவினிலும் நாடோறுந் தாம்பிறந்து
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்
சான்ற உயிரக்ள் சமைத்துவிட்டாய், நான்முகனே!
சால மிகப்பெரிய சாதனை காண் இஃதெல்லாம்!
தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சி மிக விந்தையடா!
(குயிலும் மாடும் மூன்றாம் பாகம் நாளை வரும்)
Back To Index
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications