ஆகஸ்டுக்குப் பிறகு இந்திய அணியில் ஸ்ரீநாத் தேர்வு செய்யப்படுவார் - லேலே

Subscribe to Oneindia Tamil
வாசகர்கள் பேசுகிறார்கள்......

இந்தத் தமிழ் இணையம் குறித்து வாசகர்கள் அனுப்பும் ஈமெயில்கள் இங்கு இடம் பெறும். உங்கள் ஈமெயில்விலாசத்தை நாங்கள் குறிப்பிடுவதில்லை. எனவே, உங்களின் தபால் முகவரியை அல்லது ஊர்/ நாட்டின்பெயரையாவது நிச்சயம் குறிப்பிடவும். இனி கடிதங்கள்...

நான் தங்களது தமிழ் இண்-டி-யா இன்ஃபோ.காம் செய்தித் தளத்தைத் தினமும் தவறாமல் படித்து வருகிறேன். தமிழில் இத்தகைய முழுமையான தளத்தைப் பார்ப்ப-தில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. தினமும் புதிய செய்திகளைத் தவறாமல் தருகிறீர்கள். உங்கள் தளத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பற்றி தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும்.

செந்தில்நாதன்.

-------------------------------------

உங்கள் தமிழ் எடிசன் மிக அற்புதமாக உள்ளது. சுகி. சிவம், கி.ராஜநாராயணன் ஆகியோரின் கட்டுரைகள் அருமை. நாள் எல்லாம்கிரிக்கெட்டையும் அரசியலையும் படித்துக் கொண்டிருப்பதைவிட இது போன்ற விவரமாக விஷயங்களை படிப்பதையே விரும்புகிறேன்.உங்கள் நல்ல பணி தொடரட்டும்.

எஸ்.பி. நாதன்,
பிட்ஸ்பர்க்,
அமெரிக்கா

-------------------------------------

இந்தியா இன்ஃபோ.காம் தமிழ் செய்தித் தளம் மிகவும் சிறப்பாக உள்ளது குறித்து நான் மிகவும்மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் இன்னும் எங்களுக்குப் பயனளிக்கும்.

ரமேஷ்

-------------------------------------

இந்தியா இன்ஃபோவின் தமிழ் செய்தித் தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும்செய்திகளை இன்னும் அதிகமாக உடனுக்குடன் நீங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அரசியல், விளையாட்டு, அறிவியல், தத்துவம், சினிமா என்று பல்வேறு பாகங்களாகப் பிரித்து அதிகச் செய்திகளைவிரிவாகக் கொடுத்தால் நல்லது. மேலும் அந்தந்தத் துறையில் பிரபலமாய் விளங்கும் வல்லுநர்களின் பேட்டிகளைஅளித்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி
ராஜன் விஜயகுமார்

-------------------------------------

தமிழில் மிக அருமையான செய்தித் தளம். தமிழகத்தை கண் முன் நிறுத்துகிறீர்கள்.
நன்றி.

மகேஷ்,
குயீன்ஸ்ரோடு,
பெங்களூர்.

-------------------------------------

கீதையின் பாதையில் தொடரில் சுகி சிவத்தின் எழுத்து நடையில் சொக்குகிறோம்.

சேது
பட்டர்வொர்த்,
மலேசியா

-------------------------------------

தமிழர்கள் அனைவருக்கும் முதலில் எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். மதுரையில் இருக்கும்எனது குடும்பத்தினருக்கும் இச் செய்தி மூலம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் பெயர் மெய்யப்பன். மதுரை சொந்த ஊர். தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 1995-ல் மெக்கானிக்கல்என்ஜீனியரிங் முடித்தேன்.

20 நாட்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன். நான் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து மேல்பயிற்சிக்காக இங்கு வந்துள்ளேன். செய்தித் தாள்கள் படிக்கும் பழக்கம் உள்ள நான் இப்போது தமிழ்ச்செய்திகளுக்கு, இன்டியாஇன்போ.காம் இன்டர்நெட் தளத்தின் தமிழ்ப் பதிப்பைத்தான் நாடுகிறேன்.

தமிழ் இன்டியாஇன்போ.காமில் உள்ள தமிழ்ப் பத்திரிகைகள் இணைப்பு எதையும் விடுவதில்லை.இன்டியோஇன்போ.காம் மூலம் தமிழகச் செய்திகளைத் தெரிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொடர்ந்து இந்தப் பணியை செய்யுங்கள். இதன் மூலம் தமிழகத்திலிருந்து வெளியே வந்து வெளிநாடுகளில்வசித்து வரும் என்னைப் போன்ற தமிழர்களுக்கு, தாய் நாட்டில்தான் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படச்செய்கிறீர்கள்.

நன்றி.
வணக்கமுடன் அன்புள்ள
M Meyyappan
C/o Copper Mines of Tasmania,
Queenstown, TAS 7467.
Australia.
-------------------------------------

இன்டியாஇன்போ.காம் தமிழ் பக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சுகி.சிவம் மற்றும் இறையன்புவின்கட்டுரைகள் அருமை. இவற்றை அடிக்கடி மாற்றினால் நன்றாக இருக்கும். முடிந்தால், பிற தமிழ்இணையங்களுக்கும் இணைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

மெய்கண்டமூர்த்தி.
-------------------------------------

இது மிக பயனுள்ள தளம். முக்கியம் செய்திகள், தகவல்கள் அனைத்தும் தமிழிலேயே வருவதுதான் மிக அருமை.ஆனால் பழைய செய்திகள் நிறைய இருக்கின்றன. அடிக்கடி மாற்றினால் நல்லது.

வி.ராமகிருஷ்ணன்.
-------------------------------------

இன்டியோஇன்போ.காம் தமிழ்த் தளத்தின் ரெகுலர் வாசகன் நான். தமிழகத்திற்கு வெளியே இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எனது மாநிலம் குறித்து உடனுக்குடன் தகவல்கள் தமிழில்கிடைப்பது சந்தோஷமாகவும் இருக்கிறது.

வி.சந்தோஷ்.
-------------------------------------

தமிழ்ச் செய்திகளைத் தரும் தமிழ் இந்தியா இன்ஃபோ.காம் வெப் தளம் என்னை மிகவும் பரவசப்படுத்திவிட்டது. தமிழகச் செய்திகளை அறிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், சில செய்திகளில் எழுத்துப் பிழைகள். திருத்திக் கொள்ளுங்கள்.

நன்றி!

Name: Jayashree Janardhan

-------------------------------------

தமிழ் இந்தியா இன்ஃபோ.காம் வெப் தளத்தில் தமிழ்ச் செய்திகளைப் படிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் நிறைய செய்திகளைத் தாருங்கள்

நன்றி!
Name: girija ethirajan, kuwait.

-------------------------------------

நீங்களும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம். கருத்துக்களை ஆங்கிலத்திலேயேஅனுப்பலாம்.
E-Mail to :[email protected]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+