தமிழகத்தில் இன்று
கிங்ஸ்டன்:
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையே கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் 2-வதுகிரிக்கெட் டெஸ்ட் டிராவில் முடியும் நிலையில் உள்ளது.
4-ம் நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள்எடுத்திருந்தது. இன்னும் ஒரே நாள் எஞ்சியுள்ள நிலையில் இந்த டெஸ்ட் டிராவில் முடியும் வாய்ப்பே அதிகம்உள்ளது.
முந்தைய தின ஸ்கோரான விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் என்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனதுஇரண்டாவது இன்னிங்ஸை பாகிஸ்தான் தொடர்ந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் இம்ரான் நசீரும், வாஸிமும்சிறப்பாக ஆடினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தனர். இந் நிலையில், 82 ரன்கள் எடுத்தநிலையில் வாஸிம் அவுட்டானார்.
அவருக்குப் பிறகு வந்த வீரர்கள் ஓரளவு நிலைத்து நின்று ஆடியதால் பாகிஸ்தான் ரன்கள் குவித்தது. தொடர்ந்துவந்த வீரர்களின் துணையுடன் ஆடிய நஸீர் சதமடித்தார். மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த3-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவர் 131 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். இதில் 15பவுண்டரிகள் அடங்கும்.
4-ம் நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்திருந்தது. ரஸாக் 30ரன்களுடனும், சக்லைன் முஷ்டாக் ரன் எடுக்காமலும் அவுட்டாகாமல் இருந்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணிமொத்தம் 200 ரன்கள் முன்னிலை பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ரியான் கிங் 62 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 398 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம்அந்த அணி 145 ரன்கள் முன்னிலை பெற்றது. அணியின வேவல் ஹைன்ட்ஸ் 165 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான்அணியில் சக்லைன் முஷ்டாக் 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் தனது முதல்இன்னிங்ஸில் 253 ரன்கள் எடுத்தது.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ் - பாகிஸ்தான் 253 ரன்கள்; மேற்கிந்தியத் தீவுகள் 398 ரன்கள் (வேவல் ஹைன்ட்ஸ் 165 ரன்கள்,சக்லைன் முஷ்டாக் 5/121 ரன்கள்).
இரண்டாவது இன்னிங்ஸ் - பாகிஸ்தான் 345/7 விக்கெட் (இம்ரான் நசீர் 131, வாஸிம் 82)
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications