தமிழகத்தில் இன்று
-ம-து-ரை:
தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து 15 பவுன் நகை திருடிய பெண்ணைப் போலீசார் அடுத்த சில நிமிடங்களில் கைது செய்தனர்.
இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பெரியதாய். இவரும் இவரது தோழியான ராஜபாளையம் தளவாய்புரத்தைச் சேர்ந்த பிச்சம்மாளும் சேர்ந்துமதுரையில் பாண்டி கோவிலுக்குச் சென்றனர்.
அவர்கள் சாமிகும்பிடப் போன சமயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் தாங்கள் அணிந்திருந்த நகைகள் பறிபோய்விடுமோஎன்ற பயத்தில் இருவரும் தாங்கள் அணிந்திருந்த நகைகளைக் கழற்றி ஒரு துணிப்பையில் போட்டு தனியாக வைத்திருந்தனர்.
பின்னர் சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்குள் சென்றனர். இதை அவர்கள் அருகில் நின்றுகொண்டிருந்த பெண் பார்த்து விட்டாள்.
உடனடியாக அப்பெண் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் தீர்த்தம் என்று கூறி தண்ணீர் கொடுத்தாள்.
இதை பெரியதாயும், பிச்சம்மாளும் வாங்கிக் குடித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மயங்கி விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப்பெண் நைசாய் அவர்கள் நகைகள் வைத்திருந்த துணிப்பையை பறித்துக் கொண்டு தப்பித்து விட்டாள்.
இதையடுத்து கோயில் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த நகைகளைப் பறிகொடுத்த பிச்சம்மாளும், பெரியதாயும் தங்களுக்குதீர்த்தம் கொடுத்து ஒரு பெண் தங்களது பையைப் பறித்துக் கொண்டதாகக் கூறினார்கள்.
பின்னர் கருப்பாயூரணி போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிரமாய்த் தேடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நகை திருடிய நாகம்மாளைக் கைது செய்து நகைகளைப்பறிமுதல் செய்தனர்.
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications