கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
வேலூர்:
இலங்கையில் இதுவரை 90 ஆயிரம் தமிழர்கள் இறந்துள்ளனர் என மதி-மு-க பொ-துச் செய-லா-ளர் வைகோ கூறினார்.
வேலூர் ஜோலார்பேட்டையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பக் கூடாது. ஆயுதம் அனுப்பலாம் என்று உமாபாரதி கூறுகிறார். அவருக்குஅதிமேதாவி என்று நினைப்பு. இலங்கைப் போரில் 90 ஆயிரம் தமிழர்கள் இறந்துள்ளனர்.
இதுபற்றிப் பேசினால் தேசத்துரோகம் என்கிறார்கள். தமிழர்களுக்கு பரிந்து பேசுவது தேசத்துரோகமா? இப்படிப்பேசுபவர்களுக்கு விடுதலைப்புலிகளின் வரலாறு தெரியுமா? பங்களாதேஷ் உருவானபோது இவர்கள் எங்கேபோனார்கள்?
செஞ்சிலுவைச் சங்கத்தினர் எடுத்துச் சென்ற உணவு, மருந்து பொருட்களை தமிழர்களுக்கு கொடுக்காமல்தடுக்கிறார்கள். விடுதலைப்புலிகள் ஏன் இன்னும் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கவில்லையென்று கேட்கிறார்கள்?
அங்குள்ள தமிழர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு விடுதலைப்புலிகள் கூறுகிறார்கள்.ஆனால் மக்கள் யாரும் வெளியே நடமாடக் கூடாது என்று இலங்கை அரசு ஊரடங்கு -உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வைகோ பேசினார்.












Click it and Unblock the Notifications