தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
இந்தியாவின் கைவினைப் பொருள் ஏற்றுமதி அதிகரிப்பு

டெல்லி:

1999-2000-ம் ஆண்டியில் இந்தியாவிலிருந்து ரூ.6,000 கோடிக்கு கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 19சதவீதம் அதிகமாகும்.

இதுதொடர்பாக, இந்திய கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சிலின் செயல் இயக்குநர் ராகேஷ் குமார் கூறியதாவது:

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படும் கைவினைப் பொருட்களின் அளவு அதிகரித்து வருகிறது. 1998-1999-ம் ஆண்டு ரூ.5,100கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், 1999-2000-ம் ஆண்டில் ரூ.6,000 கோடிக்கு கைவினைப் பொருட்கள் ஏற்றுமதிசெய்யப்பட்டன. இது கடந்த ஆண்டை விட 19 சதவீதம் அதிகமாகும்.

கைவினைப் பொருட்களில் எம்பிராய்டரி செய்யப்பட்டபொருட்கள் தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக மரப்பொருட்களும், அடுத்து சால்வைகள் மற்றும் கலைப் பொருட்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2000-2001-ம் ஆண்டில் ரூ.7,000 கோடி மதிப்புள்ள கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியைமேலும் அதிகரிக்க மத்திய ஜவுளித் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக டெல்லி மற்றும் மொராதாபாத்தில் தேசியஅளவிலான கைவினைப் பொருட்கள் வடிவமைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார் ராகேஷ் குமார்.

யு.என்.ஐ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+