மேட்ச் பிக்ஸிங் தொடர்-பா-ன உண்-மையை மக்களிடம் சொல்வேன் - பிரபாகர்
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான உண்மைகளை மக்களிடம் விரைவில் தெரிவிப்பேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர்கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், தனக்கும் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும் மனோஜ் பிரபாகர்குற்றம் சாட்டினார். ஆனால், அந்த வீரர்களின் பெயர்களை அவர் இதுவரை வெளியிடவில்லை.
இதற்கிடையே, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான புகார்களை விசாரிக்கும்படி சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந் நிலையில், மனோஜ்பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தது கபில்தேவ் தான் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ராகுற்றம் சாட்டினார். ஆனால், அக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக தன்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில, சமீபத்தில் கூடிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிந்த்ராவுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
சிபிஐ தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தனது மவுனத்தைக் கலைக்க மனோஜ் பிரபாகர் தயாராகி வருகிறார். தான் கூறியகுற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை மக்களிடம் தெரிவிக்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மக்களிடம் தகவல்களைத் தெரிவிக்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஒருவாரத்தில் அனைத்து தகவல்களையும் வெளியிடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
நான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கிரிக்கடெ கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறினர்.ஆனால், அத்தகைய மிரட்டலுக்கும் நிர்பந்தத்துக்கும் நான் அடிபணியமாட்டேன்.
விரைவில் அனைத்து உண்மைகளையும் மக்களிடம் தெரிவிப்பேன். எதற்காக நான் மன்னிப்பு கேட்கவேண்டும். வாரியத்துக்கு எதிரான எந்தநடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை. வாரிய உறுப்பினர்களுக்கு எதிரான எந்த கருத்துக்களையும் நான் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும்போது,என்னை அவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரியது சரியான செயல் அல்ல என்றார் மனோஜ் பிரபாகர்.
இதற்கிடையே, தான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைகளை உடனே தெரிவிக்கவில்லை என்று மனோஜ் பிரபாகர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications