ஆசியக் கோப்பையை வெல்வோம் - கங்குலி
கல்கத்தா:
வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாகோப்பையை வெல்லும் என்று அணி கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.
புனேயில் நடைபெற்ற அணி தேர்வு கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்ட செவ்வாய்க்கிழமை இரவு கல்கத்தாதிரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
டாக்காவில் இம்மாதம் 28-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறஉள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.
ஆசியக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து வீரர்களும் தங்களது முழுதிறமையைக் காட்டி விளையாடுவோம். நிச்சயம் நாங்கள் கோப்பையுடன் தாய் நாடு திரும்புவோம்.
ஆசியக் கோப்பைக்காக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணிக்கான வீரர்கள் அனைவரும் முழுதிறமையுடனும் தகுதியுடனும் உள்ளனர். அத்தகைய வீரர்கள் தான் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆகவே, கோப்பையை வெல்வது கடினமானதாக இருக்காது என்று கருதுகிறேன்.
இந்திய அணியில் குறிப்பிட்ட அளவுக்கு பந்து வீச்சாளர்கள் இல்லை என்பது உண்மைதான். இருப்பினும்,இருக்கும் பந்து வீச்சாளர்களை வைத்து திறமையாகச் செயல்படுவோம். தற்போதைக்கு இந்த அணிதான் சிறந்தஅணி.
டாக்காவில் உள்ள பிட்சி, பேட்டிங்குக்குச் சிறந்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை, சிறந்த பேட்ஸ்மேன்கள்உள்ளனர். நிச்சயமாக பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை விட பேட்டிங்கில் இந்திய அணி வலுவாகஉள்ளது.
சச்சின் டெண்டுல்கர் ரன் எடுக்கத் தவறிவிட்டால் மற்ற வீரர்களும் ரன் குவிக்கத் தவறிவிடுகின்றனர் என்பதைஒப்புக் கொள்ளமாட்டேன். ஏனெனில் இந்திய அணியில் ராகுல் திராவிட், அஜய் ஜடேஜா, அசாருதீன் ஆகியசிறந்த வீரர்கள் உள்ளனர். டாக்காவில் நமது அணியின் பேட்டிங் திறமை நன்கு பளிச்சிடும். கோப்பை நமக்குக்கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார் கங்குலி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications