தமிழகத்தில் இன்று
பியோபோர்ட் கேசல்:
செவ்வாய்க்கிழமை லெபானில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறத் தொடங்கின.
தெற்கு லெபனானில் உள்ள கோலன் குன்றுகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த 22 ஆண்டுகளாக இருந்தனர்.
அவர்கள் தற்போது அங்கிருந்து வெளியேற ஆரம்பித்து விட்டனர். மிகப்பெரிய விடுதலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ராணுவ வீரர்கள் அனைவரும் தங்கள்நாட்டு தேசியகீதத்தைப் பாடியபடி, ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் தங்கள் சொந்த நாடு திரும்பினர்.
அவர்கள் லெபனானிலிருந்து வெளியேறும்பொழுது எந்த வித வன்முறைச் சம்பவத்திலோ, லெபனான் ராணுவத்தினருடன் தாக்குதல் நடத்தவோ இல்லை.
22 ஆண்டுகளுக்குப்பின் தங்கள் நாட்டுக்குத் திரும்பி வரும் ராணுவத்தினருக்காக இஸ்ரேலில் அனைவரும் ஆனந்தக் கண்ணீருடன் காத்திருந்தார்கள். அவர்கள்ஜீப்புகளில் தங்கள் சொந்த நாடான இஸ்ரேலுக்கு வந்திறங்கினார்கள்.
ஜூலை 7 ம் தேதிக்குள் இஸ்ரேல் படைகள் அனைத்தும் லெபனானில் இருந்து வாபஸ் பெறப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் இஹூத் பராக் ஏற்கனவேஅறிவித்திருந்தார்.
இஸ்ரேல் நாட்டினர் இந்த நாளை மிகப்பெரிய புனித நாளாகவும், வெற்றித்திருநாளாகவும் கொண்டாடினார்கள்.
ரஷ்யா, ஈரான் மகிழ்ச்சி:
இஸ்ரேல் படையினர் வாபஸ் பெற்றதற்கு ரஷ்யா தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-லெபனான் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் எப்போதுமே அதாவது கடந்த 22 ஆண்டுகளாக பதட்டம் காணப்பட்டு வந்தது. இப்போதுஐக்கிய நாடுகள் சபையின் தூண்டுதலின் பேரில் லெபனானில் இருந்து இஸ்ரேல் படையினர் வாபஸ் பெற்றுள்ளனர். இது இஸ்ரேல் நாட்டின் வளர்ச்சிக்கானஅறிகுறி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
ஈரான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கமால் ஹராசி இதற்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
லெபனான் நாட்டினர் மகிழ்ச்சி வெள்ளம்:
இஸ்ரேல் நாட்டினர் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி விட்டதால் லெபனான் நாட்டினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். லெபனானில் மார்ஜாயூன்பகுதியில் அனைவரும் சந்தோஷத்தில் இந்த நாளை வெற்றிவிழாவாகக் கொண்டாடினார்கள்.
லெபனானில் உள்ள மிகப்பெரிய கிறிஸ்தவ ஆலயத்தில் இந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் விதத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் கொண்டாடப்பட்டது.
முன்னதாக ஐந்து வாரங்களுக்கு முன் லெபனானில் ஆக்கிரமிப்புச் செய்துள்ள இஸ்ரேல் படையினர் விரைவில் வாபஸ் பெறப்படுவார்கள் என்று இஸ்ரேல்பிரதமர் இஹூத் பராக் அறிவித்திருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications