கிரிக்கெட் நிர்வாகத்தில் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் இடம் பெறவேண்டும் - கபில் தேவ்
டெல்லி:
கிரிக்கெட் நிர்வாகத்தில் கிரிக்கெட் வீரர்கள் அதிகம் இடம் பெறவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின்பயிற்சியாளர் கபில் தேவ் தெரிவித்தார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடியின் புதிய கிரிக்கெட் இன்டர்நெட் வெப்தளம் துவக்கவிழாவில் அவர் பேசியதாவது:
எந்தத் துறையைச் சார்ந்த அமைப்பிலும் அத் துறையைச் சார்ந்தவர்கள் அதிகம் இடம் பெற்றால்தான் அந்தஅமைப்பு நன்றாகச் செயல்படமுடியும். அதுபோல் கிரிக்கெட்டிலும். கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிக அளவில்கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றால்தான் கிரிக்கெட் விளையாட்டு குறித்து நன்றாகத் திட்டமிட்டு செயல்படமுடியும்.
அதாவது கிரிக்கெட் நிர்வாகத்தில் 50 முதல் 60 சதவீதம் பேர் கிரிக்கெட் வீரர்களாக இருக்கவேண்டும். மற்றவர்கள்அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால், தற்போது கிரிக்கெட்நிர்வாகத்தில் 99 சதவீதம் பேர்அரசியல்வாதிகளாகவும், தொழிலதிபர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும்உள்ளனர்.
இந்திய அணியில் சிறந்த பந்து வீச்சாளர்கள் இல்லை. அதனால்தான் சமீப காலமாக இந்திய அணிக்குப்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தியாவிலிருந்துகுறிப்பிட்ட அளவுக்கு வேகப் பந்து வீச்சாளர்களோ, சுழற் பந்து வீச்சாளர்களோ வரவில்லை என்பதுவேதனைக்குரியது.
அளவுக்கு அதிகமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதுதான் பந்து வீச்சாளர்களின் திறமையைப் பாதிக்கிறதுஎன்று நான் கருதுகிறேன். ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ரன்களைக் கட்டுப்படுத்தக்கூடிய திறமையான பந்துவீச்சாளர்கள் தேவை.
டெஸ்ட் போட்டிகள் அதிகம் விளையாடப்படவேண்டும். ஆண்டுக்கு சுமார் 15 முதல் 20 ஒருநாள் போட்டிகள்விளையாடினால் போதும். இப்போது வீரர்களுக்குப் போதுமான ஓய்வும் கிடைப்பதில்லை. ஏனெனில் ஆண்டுக்கு10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் நீண்ட நாட்களுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கான உடல் தகுதி, மனஉறுதிஇல்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய உடல் தகுதியால் வெற்றி பெறுகின்றனர். பவுண்டரியிலிருந்துநேராக விக்கெட் கீப்பரின் கைக்கு பந்து வீசும் திறமையை அவர்கள் பெற்றுள்ளனர். ஆனால், இந்திய வீரர்களோஉள் வட்டத்திலிருந்தே பந்து வீச முடியாமல் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியர்கள்தான் உடல்தகுதியில் முதன்மையானவர்கள்.
நாளுக்கு நாள் புதிய திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். அப்போதுதான் கிரிக்கெட் விளையாடு மேலும் வளரும்.இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு நல்லபணிகளை ஆற்றி வருகிறது. கிரிக்கெட்டை வர்த்தகரீதியாகக் கொண்டு சென்றதில் கிரிக்கெட் வாரியம் சிறப்பானசெயலாற்றி உள்ளது. ஆனால், கிரிக்கெட் மைதானங்கள் குறித்து வாரியம் தக்க கவனம் செலுத்தவில்லை என்றுநான் கருதுகிறேன்.
பெங்களூரில் கிரிக்கெட் அகாதெமி துவக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது, இளம் வீரர்கள் தங்கள்திறமையைக் காட்டி சர்வதேச தரத்துக்கு உயரமுடியும் என்றார் கபில்தேவ்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications