கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் முக்கிய திருப்பம்: சிபிஐயிடம் நேரில் ஆஜரானார் மனோஜ் பிரபாகர்
டெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதான கிரிக்கெட் சூதாட்டம்குறித்து விசாரித்து வரும் சிபிஐ அலுவலகத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் புதன்கிழமை நேரில்ஆஜரானார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் சில கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டதாகவும், தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்ததாகவும் 3ஆண்டுகளுக்கு முன் மனோஜ் பிரபாகர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்என்றும் அவர் கோரினார்.
குற்றச்சாட்டுகளைக் கூறிய அவர், சம்பந்தப்பட்ட வீரர்களின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார். அவரதுகுற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சந்திரசூட்டிடமும் அவர் வீரர்களின் பெயரைத்தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, மனோஜ் பிரபாகருக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது கபில்தேவ் என்று இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா கூறினார். இப்படி குற்றச்சாட்டுகள் அதிகரித்ததைஅடுத்து இது குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
சில நாட்களுக்குப் பிறகு சிபிஐ அலுவலகத்துக்கு நேரில் வந்த பிந்த்ரா, சுமார் 360 பக்க அறிக்கையைச்சமர்ப்பித்தார். கபில்தேவ் மீது தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று அவர் தெரிவித்தார்.
இந் நிலையில், கபில் தேவ் மீதும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறிய பிந்த்ராவுக்குநோட்டீஸ் அனுப்புவது என்று கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு நோட்டீஸும்அனுப்பப்பட்டது.
நோட்டீஸுக்கு பிந்த்ரா அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா தெரிவித்தார். மேலும், தான் கூறிய குற்றச்சாட்டுகள்குறித்து உண்மைகளை விரைவில் தெரிவிக்கவில்லை என்றால் மனோஜ் பிரபாகர் மீதும் வழக்குத் தொடரப்படும்என்று அவர் தெரிவித்தார்.
இந் நிலையில், தான் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து மவுனமாக இருந்த மனோஜ் பிரபாகர், இந்த வாரத்துக்குள்உண்மையைச் சொல்வேன் என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். ஆனால், திடீரென்று சிபிஐ அலுவலகத்துக்குபுதன்கிழமை அவர் நேரில் ஆஜரானார்.
புதன்கிழமை பிற்பகல் சிபிஐ அலுவலகம் வந்த பிரபாகர், தான் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பானஆவணங்களைச் சமர்ப்பித்தார். ஆனால், அதன் முழு விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், கிரிக்கெட்சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் பெயரை அவர் சிபிஐயிடம் தெரிவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிபிஐயிடம் பிரபாகரே நேரில் ஆஜராகி, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான தகவல்களைத் தெரிவித்துள்ளதைஅடுத்து, சிபிஐ விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஏனெனில், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி முதலில்குற்றச்சாட்டுகளைக் கூறியது பிரபாகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications