செஸ் போட்டியிலும் "மேட்ச் ஃபிக்ஸிங்"

Subscribe to Oneindia Tamil
ஸ்வர்-ண-மால்-யா

இ-னி இந்-தப் ப-கு-தி-யில் வாரந்-தோ-றும் சின்-னத்-தி-ரை நட்-சத்-தி-ரங்-கள் தங்-க-ளுக்-கு பிடித்-த டாப் 10 பற்-றிநம்-மு-டன் பகி-ர்ந்-து கொள்-வார்-கள்.

மு-த-லில் தமிழகத்தின் பிரபல சின்னத்திரை நட்சத்திரம் - ஸ்வர்ணமால்யா

Swarnamalyaஇவர் தனக்குப் பிடித்த டாப் 10 விஷயங்களைச் சொல்கிறார்...!

1.வாழ்க்கை: வாழ்க்கை சுவாரஸ்யமானது. நாளை, அடுத்தநிமிடம், என்ன நடக்கும்னு தெரியாம.. எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்கிறது அற்புதமான விஷயம். இதுல சிரிப்பு, அழகு, போட்டின்னு பல சுவாரஸ்யம். I love life.

2.நண்பர்கள்: கல்லூரி நண்பர்கள்..(சுகன்யா, சுவாதி, காயத்திரி, ஷைலஜா இன்னும் பலர்) பொதுவாகவே நண்பர்கள் என் வாழ்க்கையில் முக்கிய அம்சம். அவர்கள் இல்லாமல், நட்பு இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பது என் பாலிஸி!

3.டான்ஸ்: பரதநாட்டியம், குச்சுப்புடி ஆரம்பித்து எல்லா நாட்டியங்களும் எனக்குப் பிடிக்கும். சிரிப்பு, அழகை மாதிரி நம்முடைய எல்லா உணர்வுகளையும் டான்ஸ் மூலம் பிரதிபலிக்கலாம்!

Swarnamalya 4.கவிதை: ஆங்கிலக்கவிதைகள் எழுதவும், படிக்கவும் பிடிக்கும். கவிதை என்பது வாழ்க்கையைப் போல, மழையைப் போல அழகான விஷயம்!

5.குடும்பம்: அப்பா, அம்மா, தங்கை, ஷிபா என்றவரிடம் ஷிபா யார் என்றோம். ஹேய் ஷிபா என்றார். துள்ளியோடி வந்தது ஒரு பாமரேனியன் நாய்க்குட்டி. நம்மை ஒரு முறை முறைத்துவிட்டு, ஸ்வர்ணமால்யாவின் மடியில் ஏறிக்கொண்டது. ஷிபாவை நாய்குட்டின்னு யாராவது சொன்னால் எனக்கு கோபம் வந்து விடும். அது நாய் அல்ல. என்னுடைய இன்னொரு சிஸ்டர் மாதிரி! என்றார் ஷிபாவை வருடியபடி..! கொடுத்து வைத்த நாய்க்குட்டி... ஸாரி ஷிபா!

6.ஷாப்பிங்: கைநிறைய பணத்தோட போய்.. ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி எனக்குப் பிடிச்ச எல்லா பொருட்களையும் அள்ளிக்கிட்டு வரணும்!

7.குழந்தைகள்: எப்பொழுதும் பத்து, பதினைந்து குழந்தைகளுக்கு நடுவில் இருக்க வேண்டும். பெரியவர்கள், மனிதர்களிடம் பேசுவதை விட குழந்தைகளிடம் பேசுவது இனிமையான விஷயம்.

8.சினிமா: நிறைய்யயய................. பார்ப்பேன். மொழிபாரபட்சமெல்லாம் கிடையாது. பொழுதுபோக்குப் படங்கள் பிடிக்கும். கடைசியா பாத்தது ஜேம்ஸ்பாண்டு!

9.சென்னை: எந்த தேசம் போனாலும் நம்ம ஊரு போல வருமான்னு ஒரு ஏக்கம் இருந்துகிட்டே இருக்கும். பொதுவாகவே கடற்கரை, மலை, அருவினு இருக்கிற இடங்கள் ரொம்ப பிடிக்கும்.

10.வத்தக்குழம்பு: சாப்பாடு வெஜிடேரியன். அதில் எல்லா சத்துக்களும் இருக்கிறது என்று சின்னதாக வெஜிடேரியன் சத்துக்கள் பற்றிச் சொன்னார். வத்தக்குழம்பு சாப்பிட்டு இருக்கிறீர்களா..? அருமையான ஐயிட்டம்! ஐ லவ் வத்தக்குழம்பு.. என்று சப்புக் கொட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+