தமிழகத்தில் இன்று
ஜெயிலில் இருந்து தப்பிய ரெளடி பிடி-பட்-டார்
சென்னை:
ஜெயிலில் இருந்து தப்பித்த பிரபல ரவுடியை சென்னை நகர தனிப்போலீஸ் படையினர் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்தனர்.
இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரபல ரெளடி சின்ன மாரி. இவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் நாங்கள் கைது செய்துள்ளோம். அவர் தற்போது திருவான்மியூரில் பதுங்கியிருப்பதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்துப் போலீஸ் தனிப்படை அங்கு சென்று அங்கு பதுங்கியிருந்த சின்னமாரியைக் கைது செய்தனர்.
ஏற்கனவே குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சின்னமாரி கடந்த ஏப்ரல் 30 ம் தேதி சென்னை மத்தியச் சிறையில் இருந்து தப்பித்தார். அவர் தனக்குஉடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டிருந்தார். ஆனால் அவர் அழைத்துச் செல்லப்படும் இடத்தில்போலீசாரைத் தாக்கிவிட்டு ஜீப்பிலிருந்து இறங்கி ஓடி தப்பித்து விட்டார்.
மேலும் இவர் ஜெயிலர் ஜெயக்குமாரை உயிரோடு எரித்துக் கொலை செய்த வழக்கிலும் இவர் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர். இவர் மேல் 52வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கிருந்து தப்பித்த பின் சின்னமாரி பல வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள், தங்கச்சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தார்.
தற்போது கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 6 பவுன் தங்கச்சங்கிலி, மற்றும் ரூ 3000 ரொக்கப்பணம் ஆகியவை மீட்கப்பட்டன.
ரூ50 ஆயிரம் வெகுமதி:
இந்த ரவுடியைப் பிடித்த தனிப்போலீஸ் படையினருக்கு ரூ 50 ஆயிரம் வெகுமதி அளிக்கப்போவதாக சென்னை போலீஸ் கமிஷனர் காளிமுத்து அறிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications