தமிழகத்தில் இன்று
பிஜியில் ராணுவ வீரர்கள் புரட்சிக்காரர்கள் இடை-யே அடி-த-டி
சுவா:
பிஜித் தீவில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி சிறை வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ராணுவ வீரர்களுக்கும்,புரட்சிக்காரர்களுக்கும் இடையே, கைகலப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் 40 புரட்சிக்காரர்களும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைவிட்டு வெளியே வந்தனர். நாடாளுமன்ற வாசலில் நின்று கொண்டிருந்த ராணுவ வீரர்களுடன் கைகுலுக்கினார். பின்னர் காவா என்ற போதைப் பானத்தைசிறிது அருந்தினர்.
அப்போது, நாடாளுமன்றத்திற்குள்ளே இருப்பவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் கார் ஒன்று வந்தது. இதையடுத்து சாலையில் இருந்த தடுப்புகளைஜார்ஜ் உள்பட புரட்சிக்காரர்கள் அகற்றத் துவங்கினர். அப்போது அவர்களுக்கும், ஒரு ராணுவ வீரருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்அங்கிருந்த வேலி பிய்த்து எறியப்பட்டது.
மோதலின்போது புரட்சிக்காரர்களில் ஒருவர், ராணுவ வீரரின் மார்பில் துப்பாக்கியை வைத்து, பிஜி மொழியில் திட்டினார். இதையடுத்து ராணுவ அதிகாரிஅய்சாகே தெளலகோ புரட்சிக்காரர்களைப் பார்த்து ஆவேசமாக சத்தமிட்டார். இரு தரப்பினரும், மாறி, மாறி துப்பாக்கிகளை வைத்து மிரட்டிக்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்படவில்லை. மோதலையடுத்து ஸ்பீட், ராணுவ வீரர்களிடம் மீண்டும் கைகுலுக்கி விட்டு தனதுஆட்களைக் கூட்டிக் கொண்டு உள்ளே திரும்பினார்.
ராய்ட்டர்ஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications