தமிழகத்தில் இன்று
இந்திய வங்கித் துறையில் சிறப்பிடம் பெற்றுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முதல்முறையாக வெளிநாடுகளில் கிளைகள்திறக்கிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களைக் கவனத்தில் கொண்டு வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நியுயார்க்,துபாய், லண்டன், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நகரங்களில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளைகள் திறக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று வங்கியின் தொழில்பிரிவுத் தலைவர் பி.ஹெச். ரவிகுமார் தெரிவித்தார்.
தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு 25 ஆயிரம் வெளிநாட்டு இந்தியர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். உலகம்முழுவதும் சுமார் 2.2 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களையும் தனது வாடிக்கையாளர்களாக்கிக்கொள்ளும் வகையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி திட்டமிட்டுள்ளது. அதற்காகவே, உலகம் முழுவதும் கிளைகள் துவக்கதிட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தற்போது 5 நகரங்களில் கிளைகள் திறக்கப்படும். அவை, முழு கிளையாகச் செயல்படுமா அல்லதுபிரதிநிதி அலுவலகமாகச் செயல்படுமா என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
1999-2000-ம் ஆண்டில் ரூ. 105.30 கோடி லாபம் பெற்றதன் மூலம் 66 சதவீத வளர்ச்சியை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2000, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி சுமார் ரூ.9,866.02கோடியை பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications