தமிழகத்தில் இன்று
சு-தா-க-ரன் தி-ரு-ம-ணத்---து-க்-கு 4.8 லட்-சத்--துக்-கு பட்-டுச் -சே-லை-கள்
சென்னை:
வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கு 4 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு பட்டுச்சேலைகள் வாங்கினார் என்று தனி நீதிமன்றத்தில் சென்னை குமரன் சில்க்ஸ்பங்குதாரர் கேசவன் சாட்சியம் அளித்தார்.
ஆட்சியில் இருந்த போது வருமானத்தை மீறி 66 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்தாக முன்னாள் தமிழக -முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாஆகியோர் மீது தனி நீதிமன்றத்தில் ஊழல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. வெள்ளிக் கிழமை நடந்த விசாரணையில் குமரன் சில்க்ஸ் பங்குதாரர் கேசவன் சாட்சியம்அளித்தார். ""1995ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி காலை 10 மணிக்கு ஜெயலலிதா வீட்டில் இருந்து அவரது செயலாளர் ஜவகர் என்பவர் என்னிடம்தொலைபேசியில் பேசினார்.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கு பட்டுச்சேலைகள் எடுப்பதற்காக உறவினர்கள் கடைக்கு வருவதாகவும், அவர்களை அருகில் இருந்துகவனித்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்.
ஒரு மணி நேரத்தில் ஜெயலலிதா வீட்டில் இருந்து ஒரு ஆண், இரண்டு பெண்கள் வந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு போய், பட்டுச்சேலைகள், பட்டுவேட்டிகள், பட்டு சட்டைத் துணிகள், பேன்ட் துணிகள் என பட்டு ரகங்கள் அனைத்தையும் காட்டினேன். அதன் விலை விவரங்களையும் தெ-ரிவித்தேன்.
பட்டுச்சேலைகள், பட்டு வேட்டிகள் என 4 லட்சத்து 84 ஆயிரத்து 712 ரூபாய்க்கு துணிகள் வாங்கினர். அதற்கான ரசீதை "ஜெயலலிதா, 36 போயஸ் தோட்டம்,சென்னை என்ற பெய-ரில் பதிவு செய்யும்படி கூறினர்.
அதன்படி நானும் ரசீது தயார் செய்து அளித்தேன். மறுநாள் மாலை ஜெயலலிதா கையெழுத்திட்ட 4 லட்சத்து 84 ஆயிரத்து 712 ரூபாய்க்கான காசோலைஅனுப்பி வைக்கப்பட்டது என்றார்.
இவ்வழக்கில் அதிமுக பிராகர் எஸ்.கே.ஆர்.விஸ்வ-நாதன் என்பவரும் வெள்ளிக்கிழமை சாட்சியம் அளித்தார். அவர் தனது சாட்சியத்தில், ""1989ம் ஆண்டுதேர்தலில் சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் அதி-முக (ஜெ.) சார்பில் போட்டியிட்டேன். பொறியியல் பட்டதா-ரியான -நான் வங்கியில் கடன்பெற்று கிண்டியில் தொழிற்சாலை -நடத்தி வந்தேன்.
கடன் தொகை மூன்று லட்சத்தை செலுத்த -முடியாத -நிலை வந்ததால், அதை விற்க ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஜெயா பப்ளிகேஷன்ஸ் -நிறுவனத்திடம்விற்றேன். -மூன்று லட்சத்திற்கான காசோலைகளை அவ-ரிடம் இருந்து பெற்றேன் என்றார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications