பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - சாம்ப்ராஸ், ஹிங்கிஸ் வெல்வார்களா?
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது.
டென்னிஸ் உலகில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதலிடத்தில் உள்ள பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா)மற்றும் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) இருவரும் இந்த ஆண்டு பட்டம் வெல்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன், விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் ஆகியவை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளாகக்கருதப்படுகின்றன. சாம்ப்ராஸ், ஹிங்கிஸ் இருவரும் பிரெஞ்சு ஓபன டென்னிஸ் போட்டியில் இதுவரைகோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் அவர்கள்பலமுறை வெற்றி பெற்றுள்ளனர்.
இரு முறை பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஹிங்கிஸ் இரு முறையும் தோல்வியுற்றார். முதல்முறை குரோஷியாவைச் சேர்ந்த இவா மஜோலியிடமும், இரண்டாவது முறை கடந்த ஆண்டு ஸ்டெப்பிகிராப்பிடமும் அவர் தோல்வியுற்றார்.
இந் நிலையில், மீண்டும் பெண்கள் டென்னிஸ் உலகில் முதலிடம் பெற்றுள்ள மார்ட்டினா ஹிங்கிஸ் இந்த ஆண்டுநிச்சயம் பட்டம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பலத்த போட்டியாக, லின்ட்ஸேதேவன்போர்ட் இருப்பார் என்று கருதப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்புதான் இவர் ஹிங்கிஸிடமிருந்து உலகின் நெம்பர் 1 இடத்தைப் பறித்தார். ஆனால், கடந்தவாரம் அந்த இடத்தை ஹிங்கிஸ் மீண்டும் பெற்றார். இருப்பினும், சமீபத்தில் விளையாடிய டென்னிஸ் போட்டியில்தேவன்போர்ட்டின் காலில் அடிபட்டது. அதனால், அவர் பிரெஞ்சு ஓபனில் விளையாடுவது சந்தேகம் என்ற ஒருதகவலும் நிலவுகிறது.
வில்லியம்ஸ் சகோதரிகள், மூன்று முறை சாம்பியனான அரான்ஸா சான்செஸ் விகாரியோ, மேரி பியர்ஸ்ஆகியோர் ஹிங்கிஸுக்குப் பெரும் சவாலாக விளங்குவார்கள் என்று கருதப்படுகிறது.
13-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முடிவில் இந்த பிரெஞ்சு ஓபனில் பீட் சாம்ப்ராஸ் விளையாடஉள்ளார். ஹிங்கிஸைப் போலவே இவரும் இதுவரை பிரெஞ்சு ஓபனை வென்றதில்லை.
இந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனை சாம்ப்ராஸ் வென்றால், இரு சாதனைகளை அவர் நிகழ்த்துவார். ஒன்று, அதிககிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்றும் மற்றொன்று ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்கஓபன், விம்பிள்டன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற இரண்டாவது வீரர் என்றும் இருசாதனைகளை அவர் நிகழ்த்துவார்.
தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராய் எமர்சன் என்பவர்தான் 12 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுமுதலிடத்தில் உள்ளார். அதே போல், 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற முதல் வீரராக ஆந்த்ரே அகாஸிஉள்ளார்.
சமீப காலமாக சிறப்பாக விளையாடு வரும் சாம்ப்ராஸ், அகாஸி இருவரும் பிரெஞ்சு ஓபனை வெல்லகடுமையாகப் போராடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
சிறப்பான வெற்றிகள் மூலம் தரப் பட்டியலில் வேகமாக முன்னேறியுள்ள பிரேஸில் நாட்டைச் சேர்ந்த கஸ்டாவோகுயர்தன், ஸ்வீடனின் மேக்னஸ் நார்மன், ரஷ்யாவின் யவ்கேனி கஃபெல்நிகோவ், மாரத் சாபின், ஸ்பெயினின்கார்லோஸ் மோயா, சிலியின் மார்சிலோ ரியோஸ் ஆகியோரும் இந்த டென்னிஸ் போட்டியில்விளையாடுகின்றனர்.
அகாஸி, சாம்ப்ராஸ் இருவருக்கும் மேற்கண்ட வீரர்கள் கோப்பையை வெல்ல கடும் போட்டியாக இருப்பார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications