தமிழகத்தில் இன்று
பாட்னா:
பிகாரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.கலவரம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகாரில் ராகோபூர், ஜாமி, நிர்சா ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை இடைத்தேர்தல்வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ராகோபூர் தொகுதியில் பிகார் முதல்வர் ராப்ரி தேவி போட்டியிடுகிறார்.சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் முதல் முறையாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகோபூரில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது இரு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பல வாக்குச்சாவடிகளுக்குள் வன்முறைக் கும்பல் புகுந்து வாக்குச் சீட்டுகளைப் பறித்தது. இதையடுத்து, வன்முறைக் கும்பலைக்கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மற்ற இரு தொகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. வன்முறைச் சம்பவங்களால் இரு தொகுதிகளில்சுமார் 40 சதவீத வாக்குகளும், ராகோபூர் தொகுதியில் 62 சதவீத வாக்குகள் பதிவாகின. சில வாக்குச் சாவடிகளில்90 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வன்முறையில் ராகோபூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட சாந்தி தேவியின் கார் டிரைவர்கொல்லப்பட்டார். வன்முறைக் கும்பல் சுட்டதில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் 50 பேருக்கு மேல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூன்று தொகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது என்று மாநில டிஜிபி கே.ஏ. ஜேகப் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications