ஆசியக் கோப்பை கிரிக்கெட் நாளை ஆரம்பம்:முதல் போட்-டி-யில் இலங்கை-வங்கதேசம்
டாக்கா:
ஆசியக் கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமைதுவங்குகிறது.
ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் நடப்புச் சாம்பியன் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில்இலங்கையும், வங்கதேசமும் மோதுகின்றன.
இறுதி ஆட்டத்தையும் சேர்த்து மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அனைத்தும் ஒளி வெள்ளத்தில்நடைபெறுகின்றன.
டாக்காவில் தற்போது நடைபெறுவது 7-வது ஆசியக் கோப்பைப் போட்டியாகும். முதல் ஆசியக் கோப்பைக்கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் 1984-ம் ஆண்டு நடத்தப்பட்டது. 1986-ல் இலங்கை, 1988-ல் வங்கதேசம்,1990-91-ல் இந்தியா, 1995-ல் ஷார்ஜா, 1997-ல் இலங்கையிலும் ஆசியக் கோப்பைப் போட்டிகள்நடைபெற்றுள்ளன.
இதில் 4 முறை இந்தியாவும், 2 முறை இலங்கையும் கோப்பையை வென்றுள்ளன. இரு முறை இறுதி ஆட்டத்துக்குத்தகுதி பெற்ற பாகிஸ்தான் கோப்பை வெல்ல முடியவில்லை.
போட்டி அட்டவணை:
மே 28 - வங்கதேசம்/இலங்கை
மே 30 - இந்தியா/ வங்கதேசம்
ஜூன் 1 - இந்தியா / இலங்கை
ஜூன் 2 - வங்கதேசம் / பாகிஸ்தான்
ஜூன் 3 - இந்தியா / பாகிஸ்தான்
ஜூன் 5 - பாகிஸ்தான் / இலங்கை
ஜூன் 7 - இறுதி ஆட்டம்
பாகிஸ்தான் தவிர மற்ற மூன்று நாட்டு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணி தற்போதுமேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மூன்றாவது மற்றும்கடைசி டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இப் போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள் விவரம்:
இந்தியா:
கங்குலி (கேப்டன்), திராவிட் (துணை கேப்டன்), டெண்டுல்கர், அசாருதீன், ஜடேஜா, ராபின் சிங், ஹேமங் பதானி,அனில் கும்ளே, அகார்கர், சபா கரீம் (விக்கெட் கீப்பர்), ஜோஷி, நிகில் சோப்ரா, டி. குமரன், அமித் பண்டாரி.
இலங்கை:
ஜெயசூர்யா (கேப்டன்), ஜெயவர்தனா (துணை கேப்டன்), அரவிந்த டிசில்வா, அட்டபட்டு, ஆர்னால்டு, தில்ஷன்,இந்திகே டிசேரம், வாஸ், ஸோய்சா, டிசில்வா, வீரரத்னே, முரளிதரன், சந்தனா, கலுவிதரனா (விக்கெட் கீப்பர்).
வங்கதேசம்:
அமினுல் இஸ்லாம் (கேப்டன்), காலீத் மஹ்மூத் (துணை கேப்டன்), ஜாவித் ஓமர், ஷாரியார் ஹுசேன், அக்ரம் கான்,ஹபிபுல் பாஷர், நெய்முர் ரஹ்மான், காலீத் மசூத் (விக்கெட் கீப்பர்), முஷ்பிக் பாபு, இனாமுல் ஹக், மொகமது ரபீக்,ராசிபுல் ஹுசேன், மஞ்சுருல் இஸ்லாம், ஷஃபியுதீன் அகமத்.
ஏற்கெனவே நடந்து முடிந்த 6 ஆசியக் கோப்பைப் போட்டியின் முடிவுகள் (இறுதி ஆட்டம்):
1984 - இந்தியா (இந்தியா 188/6. பாகிஸ்தான் 134).
1986 - இலங்கை (பாகிஸ்தான் 191/9. இலங்கை 195/5).
1988 - இந்தியா (இலங்கை 176. இந்தியா 180/4).
1991 - இந்தியா (இலங்கை 204/9. இந்தியா 205/3).
1995 - இந்தியா (இலங்கை 230/7. இந்தியா 233/2).
1997 - இலங்கை (இந்தியா 239/7. இலங்கை 240/2).
இதுவரை ஒரு முறை கூட ஆசியக் கோப்பைப் போட்டியை பாகிஸ்தான் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.1993-ல் ஆசியக் கோப்பைப் போட்டியை நடத்துவதாக அறிவித்த பாகிஸ்தான் கடைசி நேரத்தில் தனதுவிருப்பத்தை விலக்கிக் கொண்டது. இதையடுத்து 1995-ல் ஷார்ஜாவில் அடுத்த ஆசியக் கோப்பைப் போட்டிநடைபெற்றது.
முதல் இரு ஆசியக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற பாகிஸ்தான், அடுத்து நடைபெற்ற 4ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இலங்கை, 1997-ல் நடந்த ஆசியக்கோப்பைப் போட்டியிலும் அதே அதிரடி ஆட்டம் ஆடி கோப்பையை வென்று தற்போதைய சாம்பியனாகஉள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications