மேட்ச் பிக்ஸிங்: வீடியோ ஆதாரம் வைத்தி-ருக்-கி-றார் பிர-பா-கர்
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டது தொடர்பாக தன்னிடமுள்ளவீடியோ டேப் ஆதாரத்தை விரைவில் சிபிஐயிடம் சமர்ப்பிப்பேன் என்று முன்னாள்இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் கூறினார்.
1994-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பைப் போட்டியின் போது,பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக விளையாடும்படியும் அதற்கு ரூ.25லட்சம் தருவதாகவும் கபில்தேவ் தன்னிடம் கூறியதாக சில நாட்களுக்கு முன் பிரபாகர்கூறினார்.
ஆனால், பிரபாகரின் இக் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்த கபில்தேவ்,ஆதாரத்துடன் நேருக்கு நேர் வந்து குற்றம் சுமத்த பிரபாகர் தயாராக இருக்கிறாரா?ஆதாரம் இருந்தால் அதை வெளியிடுவாரா என்று கபில் தேவ் கூறினார். எதையும்நேருக்கு நேர் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கபில் தேவின் இந்த கடுமையான சவாலை அடுத்து டெல்லியில் உள்ள நட்சத்திரஓட்டலில் நிருபர்களைச் சந்தித்தார் பிரபாகர். அக் கூட்டத்தில் நிருபர்கள்மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையினர், அரசியல்வாதிகள், பொது மக்கள்ஆகியோரும் இருந்தனர்.
மேட்ச் பிக்ஸிங்கில் கபில்தேவ், அசாருதீன், அஜய் ஜடேஜா, அஜய் சர்மாஉள்ளிட்டோர் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை -வீடியோ டேப்பில் பதிவு செய்துவைத்துள்ள பிரபாகர், அதை நிருபர்கள் கூட்டத்தில் காண்பித்தார். சுமார் 90நிமிடங்கள் ஓடும் அந்த டேப்பை, மேட்ச் பிக்ஸிங் பற்றி விசாரித்து வரும் சிபிஐயிடம்சமர்ப்பிப்பேன் என்றார் பிரபாகர்.
தோற்றுப்போன ஹீரோக்கள் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த டேப்பில்,ஜக்மோகன் டால்மியா, ஏ.சி. முத்தையா, லேலே, ஐ.எஸ். பிந்த்ரா, அலி இரானி,போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா, வருமான வரித்துறை ஆணையர் விஷ்வ பந்துகுப்தா, கவாஸ்கர், ரவி சாஸ்திரி, கீர்த்தி ஆசாத், மோங்கியா, சித்து, வைத்யா, வடேகர்,பேடி, கிரன் மோரே, சந்தீப் பாட்டீல், அமர்நாத், மஞ்ச்ரேகர் உள்ளிட்டோருடையபேட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications