தமிழகத்தில் இன்று
சென்னை:
குடிபோதையில் கார் ஓட்டியது மட்டுமல்லாமல், தடுத்து நிறுத்திய போலீஸ்காரர் மீது காரை மோதி படுகாயமடையச்செய்ததாக நடிகர் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
திருடா திருடா, தலைவாசல் போன்ற படங்களில் நடித்தவர் ஆனந்த். இவர், சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம்அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் நடிகை பூர்ணிமாவும் இருந்ததாகவும், இருவரும்குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
லயோலா கல்லூரி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஆனந்தின் காரை தடுத்துநிறுத்தினார். ஆனால், காரை நிறுத்தாமல் அவர் மீது காரை மோதிவிட்டு காரை ஆனந்த் ஓட்டிச் சென்றுவிட்டார்.உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தரப்பட்டது. படுகாயமடைந்த போலீஸ்காரர் அரசுப் பொதுமருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கிடைத்ததும், கல்லூரிச் சாலையில் ரோந்துப் பணியில்ஈடுபட்டிருந்த போலீஸார், ஆனந்த் ஓட்டிவந்த காரைத் தடுத்து நிறுத்தினர். போலீஸ்காரர் மீது காரை ஓட்டியதுமட்டுமல்லாமல் நிற்காமல் வந்த குற்றத்துக்காக ஆனந்த் கைது செய்யப்பட்டார். அவரும், பூர்ணிமாவும்நுங்கம்பாக்கம் காவல் நிலைத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந் நிலையில், ஆனந்த் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், ஸ்டண்ட் நடிகர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்காவல் நிலையம் வந்து மீட்டுச் சென்றனர். ஆனால், இந்த விஷயம் அறிந்த போலீஸ் கமிஷனர் பெ. காளிமுத்து,ஆனந்தை மீண்டும் கைது செய்ய உத்தரவிட்டார். ஆனந்த் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications