மேட்ச் பிக்ஸிங்: வருமான வரி, அமலாக்கப்பிரிவு விசாரணையும் வேண்டும்"
டெல்லி:
கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கில் முழு உண்மையையும் வெளிக் கொணர சிபிஐ விசாரணை மட்டும் போதாது. வருமான வரித்துறைமற்றும் அமலாக்கப்பிரிவு ஆகியவற்றின் விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என்று வருமான வரித்துறையின் கூடுதல் கமிஷனர் விஷ்வ பந்து குப்தாதெரிவித்தார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. மேட்ச் பிக்ஸிங்கில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கருப்புப் பணம்கையாளப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஒரு கிரிக்கெட் வீரர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு முறை கூட சோதனைமேற்கொள்ளவில்லை.
சிபிஐ விசாரணையில் மட்டும் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான அனைத்து உண்மைகளையும் கொண்டு வர முடியாது. வருமான வரித்துறையும் பெரிய அளவில்சோதனையும், விசாரணையும் நடத்தவேண்டும். குறிப்பாக கிரிக்கெட் வீரர்களின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தவேண்டும்.
வருமான வரித்துறையிடம், எந்தெந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் உள்ளன என்ற பட்டியல்உள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிறைய வீரர்களுக்கு அசையாச் சொத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதைநியாயமான முறையில் அவர்கள் சம்பாதித்திருக்க முடியாது. அப்படியிருக்கும்போது எப்படி அவர்களை விட்டு விடமுடியும். ஆனால், சில வீரர்கள் தங்களதுசொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள எந்த நடவடிக்கையையும் எதிர் கொள்ளத் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர்களுக்கு இணையாக சூதாட்டக்காரர்களும் அதிக அளவில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அவர்கள் கோடிக்கணக்கில்பணம் சம்பாதித்துள்ளனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ. 3 கோடிக்கும் அதிகமாகச் சம்பாதித்த ஒரு நபரைக் கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால்,அவரைக் கைது செய்ய வருமான வரித்துறை கமிஷனர் என்னை அனுமதிக்கவில்லை. டெல்லியில் மட்டும் சுமார் 20-க்கும் அதிகமானசூதாட்டக்காரர்கள் உள்ளனர்.
வருமான வரித்துறையுடன் இணைந்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் சோதனையும், விசாரணையும் நடத்த வேண்டும். அப்போதுதான் ஹவாலா குற்றங்களைக்கண்டுபிடிக்கமுடியும் என்றார் குப்தா.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications